எந்த வங்கிக் கிளையிலும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இரண்டாயிரம் ரூபாய் நோட்டின் சட்டப்பூர்வ நிலை தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவோ, அல்லது மாற்றவோ வங்கிக் கிளைகளை அணுகலாம்.
பொதுமக்கள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக்கொள்ளலாம்.
வணிக பரிவர்த்தனை கணக்கு மூலம் ஒரு நாளைக்கு நான்காயிரம் ரூபாய் என்ற வரம்பு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கு எண் அல்லாதவர், எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் வரையிலான ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
வங்கிக் கணக்கு எண் அல்லாதவர், எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் வரையிலான ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
வணிக கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர் கட்டுப்பாடுகள் இல்லாமல் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம்.
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும் அல்லது மாற்றுவதற்கும் நான்கு மாதங்களுக்கும் மேலான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாயிரம் ரூபாய் டெபாசிட் பரிமாற்ற வசதிக்காக எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. இது முற்றிலும் இலவசமாக சேவை வழங்கப்படும்.
சேவை குறைபாடு ஏற்பட்டால் குறைகளை நிவர்த்தி செய்ய, இணையதளம் வாயிலாக ரிசர்வ் வங்கிக்கு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment