பள்ளிக்கல்வித்துறையில் 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அதிரடி மாற்றம் - ஆசிரியர் மலர்

Latest

 




03/05/2023

பள்ளிக்கல்வித்துறையில் 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அதிரடி மாற்றம்

 பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 20 பேர் அதிரடியாகப் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் உடனடியாக புதிய இடத்தில் பதவி ஏற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


காகர்லாஉஷா வெளியிட்டுள்ள அரசாணையில், 'ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனராக திருவளர்செல்வியும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணியில் கழகத்தின் துணை இயக்குநராக அய்யண்ணனும், தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக ஞான கௌரியும், தொடக்கக்கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநராக நிர்வாகப் பதவியில் பூபதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக அறிவழகனும், திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பாலமுரளியும், திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சிவகுமாரும், திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக புகழேந்தியும், கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக முருகனும், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மணிவண்ணனும், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கபீரும், திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சரஸ்வதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ராமனும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநராக ஆறுமுகமும், தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக முத்தையாவும், தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பாலதண்டாயுதபாணியும்; புதுக்கோட்டை மாவட்டம், முதன்மைக் கல்வி அலுவலராக மஞ்சுளாவும், கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சுமதியும், ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக குழந்தை ராஜனும், தொடக்கக் கல்வி இயக்கத்தில் துணை இயக்குநராக சட்டப் பதவியில் திருநாவுக்கரசும் நியமிக்கப்பட்டுள்ளனர்’ 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459