குஜராத் : 157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை - ஆசிரியர் மலர்

Latest

28/05/2023

குஜராத் : 157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

 குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 157 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 


ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 690 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில் 27 ஆயிரத்து 446 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. 


Join Telegram


சூரத் மாவட்ட மாணவர்கள் 76 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்த நிலையில் 157 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர் எவரும் தேர்ச்சி பெறவில்லை. குறிப்பாக குஜராத்தி பாடத்தில் 96 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்த நிலையில், ஒரு லட்சத்து 96 ஆயிரம் மாணவர்கள் அடிப்படை கணிதத்தில் தோல்வி அடைந்துள்ளனர். 


மாநிலத்தில் 1084 பள்ளிகள் 30 சதவீத தேர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459