12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: மாணவிகள் 96.38%, மாணவர்கள் 91.45% தேர்ச்சி; விருதுநகர் மாவட்டம் முதலிடம்..!! - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

08/05/2023

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: மாணவிகள் 96.38%, மாணவர்கள் 91.45% தேர்ச்சி; விருதுநகர் மாவட்டம் முதலிடம்..!!


சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். www.tnresults.nic.in, dge.tn.gov.in, dge2.tn.nic.in- ல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் 8.17 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

Join Telegram


பிளஸ் 2 தேர்வில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி:

பிளஸ் 2 தேர்வு எழுதிய 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 4,05,753 பேரும், மாணவர்கள் 3,49,697 பேரும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். பிளஸ் 2 தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களைவிட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி:

மாணவிகள் 96.38%, மாணவர்கள் 91.45% தேர்ச்சி அடைந்திருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மூன்றாம் பாலினத்தவர் 1 (100.00%) தேர்ச்சி அடைந்துள்ளார். மாணவர்களைவிட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் முதலிடம்:

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 97.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.79 சதவீதம் தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் 2-ம் இடம், 97.59 சதவீதம் தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் 3-ம் இடம் பிடித்தது. 87.30 சதவீதம் தேர்ச்சி பெற்று ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் அதிகம்:

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 93.76% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.03% பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் வகைப்பாடு வாரியாக தேர்ச்சி விகிதம்:

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 89.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகள் – 95.99%, தனியார் சுயநிதி பள்ளிகள் – 99.08% பேர் தேர்ச்சி பெற்றுள்ளது. இரு பாலர் பள்ளிகள் – 94.39%, பெண்கள் பள்ளிகள் 96.04%, ஆண்கள் பள்ளிகள் 87.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாட வாரியாக 100 சதவீத தேர்ச்சி:

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 2 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றனர். ஆங்கிலப் பாடத்தில் 15 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றனர். கணக்குப்பதிவியலில் அதிகபட்சமாக 6,573 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். வணிகவியலில் – 5,678 பேரும், கணினி அறிவியலில் – 4,618, கணினி பயன்பாடுகளில் -4,051 பேரும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இயற்பியல் – 812, வேதியியல் – 3,909, உயிரியல் – 1,494, கணிதம் – 690, தாவரவியல் 340, விலங்கியல் 154 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். பொருளியலில் -1,760 பேரும் வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியலில் -1,334 பேரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம்:

* விருதுநகர் – 97.85%
* திருப்பூர் – 97.79 %
* ராமநாதபுரம் – 96.30%
* சிவகங்கை – 97.26%
* தேனி – 93.17%
* மதுரை – 95.84%
* திண்டுக்கல் – 93.77%
* நீலகிரி – 93.85%
* கோவை- 97.57%
* ஈரோடு – 96.98%
* சேலம் – 94.22%
* நாமக்கல் – 96.94%
* கன்னியாகுமரி – 97.05%
* திருநெல்வேலி- 96.61%
* தென்காசி – 95.95%
* தூத்துக்குடி- 97.36%
* கிருஷ்ணகிரி-89.69%
* தருமபுரி – 92.72%
* புதுக்கோட்டை – 92.81%
* கரூர் – 94.31%
* அரியலூர் – 96.88%
* பெரம்பலூர் – 97.59%
* திருச்சி – 96.02%
* நாகை – 90.68%
* மயிலாடுதுறை – 90.15%
* திருவாரூர் – 91.46%
* தஞ்சை – 95.18%
* விழுப்புரம் – 90.66%
* கள்ளக்குறிச்சி – 91.06%
* கடலூர் – 92.04%
* திருவண்ணாமலை-89.80%
* வேலூர் – 89.20%
* திருப்பத்தூர் – 91.13%
* காஞ்சிபுரம் – 90.82%
* செங்கல்பட்டு- 92.52%
* திருவள்ளூர்-92.47%

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459