மே 11-ம் தேதி முதல் அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

 




10/05/2023

மே 11-ம் தேதி முதல் அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

988032

அரசு திரைப்படக் கல்லூரியில் சேர மே 11 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சென்னைதரமணியில் இயங்கி வருகிறது. இங்கு இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, டிஜிட்டல் இன்டர்மீடியேட், அனிமேஷன் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொடர்பான இளங்கலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.


Join Telegram


இப்படிப்புகளில் 2023-24-ம்கல்வி ஆண்டில் சேர மாணவ,மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை பின்வரும் இணையதளங்களில் மே 11 முதல் 31 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


www.tn.gov.in,


www.dipr.tn.gov.in


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ``முதல்வர், அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சிஐடி வளாகம், தரமணி, சென்னை600113'' என்ற முகவரிக்கு தபால் மூலமாக ஜூன் 2-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாணவர்கள் விண்ணப்பங்களை பெற நேரடியாக வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459