School Morning Prayer Activities - 18.04.2023 - ஆசிரியர் மலர்

Latest

 




18/04/2023

School Morning Prayer Activities - 18.04.2023

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 18.04.2023


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: வெஃகாமை

குறள் : 177
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

பொருள்:
பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது


பழமொழி :
Try try again you will succeed at last

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. தனக்கு தலைவன் இல்லா விட்டாலும் வரிசையாக சென்று தன் பணியைச் செய்யும் எறும்பு போல் இருப்பேன். 

2. ஆசிரியர் இருந்தாலும் இல்லாவிடடாலும் என் ஒழுக்கம் காத்துக் கொள்வேன்.


பொன்மொழி :

தன் பிள்ளைகளுக்கு, பிறர் மீது அன்பு செலுத்த கற்றுக் கொடுப்பதன் மூலம் தாய், தன் கடமையை செய்து முடிக்கிறாள்.


பொது அறிவு :

1. கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது எப்போது,? 

 1956 ஆம் வருடம் நவம்பர் 1ஆம் தேதி . 

 2. வங்கப் பிரிவினை எப்போது ஏற்பட்டது ?

1905 ஆம் வருடம்.


English words & meanings :

 quickeners – to make the process fast. verb. ஒரு செயலை துரிதப் படுத்தல். வினைச் சொல்


ஆரோக்ய வாழ்வு :

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாவுச்சத்து முதல் குளுக்கோஸ் முறிவு விகிதத்தை குறைக்கும் கலவைகள் கறிவேப்பிலையில் உள்ளன. இதனால், இரத்தத்தில் சேரும் குளுக்கோஸின் அளவை இது கட்டுப்படுத்தும். எனவே, நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலையை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.


ஏப்ரல் 18 இன்று


ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்  அவர்களின் நினைவுநாள்



ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல் புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். குவாண்டம் எந்திரவியல்,சார்புக் கோட்பாடு இரண்டும் நவீன விஞ்ஞானத்தின் இரு தூண்களாக கருதப்படுகிறது.ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


நீதிக்கதை


ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப்பட்டது. நடக்கவும் சிரமப்பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. 



எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார். கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார். 



கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர். ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது. 



தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது. தன் மீது விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது. 



மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர். தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்துவிட்டது. 



தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான். மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம். 



நீதி :


தம்மை நோக்கி அளவுக் கடந்த பிரச்சனைகள் வந்தாலும் அதனை கடந்து முன்வர வேண்டும்.


இன்றைய செய்திகள் - 18.04. 2023


* "ஓராண்டுக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்படும்" என்று கூட்டுறவுத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

* முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மறு சீரமைப்பு செய்யப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

* தொழிற்சாலைகள் உள்ளிட்ட உயர் அழுத்த பிரிவு நுகர்வோருக்கு பசுமை மின்சாரம் விற்பனை செய்ய மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

* தமிழகத்தில் 2022-ம் ஆண்டில் 2,532 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மருந்து தயாரிப்பு தொடர்பாக இந்தியாவின் தர விதிமுறைகள் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும் விதிகளுக்கு நிகரானதாக இருக்க வேண்டும் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

* தனியார் நிறுவன லேண்டர் 25-ம் தேதி நிலவில் தரையிறங்கும்.

* சீனா - ரஷ்யா இடையேயான உறவு மேம்பட்டு வருவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

* நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு 5 தங்கப் பதக்கங்களை வென்று தந்துள்ளார்.

* மாண்டேகார்லா டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் ரூப்லெவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Today's Headlines

* "Toilets will be provided in all the ration shops within one year," Cooperative Department Secretary J. Radhakrishnan said.

 * Social Welfare and Women's Rights Minister Geeta Jeevan has announced that the Chief Minister's Girl Child Protection Scheme will be revamped.

* Electricity Board has decided to sell green electricity to high voltage consumers including industries.

 * In Tamil Nadu, 2,532 child marriages have been stopped in 2022, according to the Social Welfare and Women's Rights Department's policy brief.

*  The Niti Aayog has said that India's quality norms for drug manufacturing should be at par with international norms.

* A private lander will land on the moon on the 25th.

 * Russian President Putin has said that the relationship between China and Russia is improving.

 * Actor Madhavan's son Vedant has won 5 gold medals for India in swimming competitions.

 * Russian player Rublev has won the Monte Carlo tennis tournament.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459