தகுதி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

18/04/2023

தகுதி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

sctnpsc-1068x580

3 மாதத்துக்குள் தமிழக்கத்தில் 54 துறைகளில் பணி மூப்பு பணிகளை தகுதியின் அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவு.


தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி மூப்பு (பதவி உயர்வு) வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் இருக்கும் 54 துறையிலும், தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தான் பதவி உயர்வு (பணி மூப்பு) வழங்க வேண்டும் என்றும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதை அடுத்த 3 மாதங்களில் தமிழக அரசு உறுதி செய்து முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


எனவே, 2023 மார்ச் 10ல் இருந்து தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பணி மூப்பு வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு இந்த உத்தரவு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459