ஆன்லைன் சூதாட்டம் தடை அமல்; விளையாடினால் 3 மாதம் சிறை - ஆசிரியர் மலர்

Latest

 




12/04/2023

ஆன்லைன் சூதாட்டம் தடை அமல்; விளையாடினால் 3 மாதம் சிறை

 Tamil_News_large_3291710.jpg?w=360&dpr=3

தமிழக அரசு இயற்றிய, 'ஆன்லைன்' சூதாட்ட தடை சட்டம், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு, நடைமுறைக்கு வந்தது. இனிமேல், ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவருக்கு, அதிகபட்சமாக மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.


இந்த சட்டத்தின்படி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லும் வாய்ப்புள்ள, அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி விளையாடும் நபருக்கு, மூன்று மாதங்கள் வரை சிறை அல்லது 5,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.


தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகள் குறித்து விளம்பரம் செய்தால், ஓராண்டு வரை சிறை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.


சூதாட்டம் அல்லது பணம் மற்றும் வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள, அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் அளிப்போருக்கு, அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.


ஒரு முறை தண்டிக்கப்பட்டு, மீண்டும் அதே தவறை செய்தால், அந்த நிறுவனத்தினருக்கு இரண்டாவது முறை அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை, 20 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.


இதை அமல்படுத்த, ஓய்வுபெற்ற தலைமைச் செயலர் அந்தஸ்துள்ள அதிகாரி தலைமையில், தமிழக ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.


உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற ஐ.ஜி., அந்தஸ்துக்கு குறையாத போலீஸ் அதிகாரி, தகவல் தொழில்நுட்ப வல்லுனர், மனநல ஆலோசகர், ஆன்லைன் விளையாட்டு தளத்தில் நிபுணத்துவம் பெற்றவர் இடம்பெற வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459