தமிழ் புத்தாண்டு(சோபகிருது ஆண்டு) ராசிபலன்கள் 2023 - ஆசிரியர் மலர்

Latest

14/04/2023

தமிழ் புத்தாண்டு(சோபகிருது ஆண்டு) ராசிபலன்கள் 2023

 சோபகிருது தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறக்கும் நிலையில், சோபகிருது ஆண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படி அமையும் என்று பார்ப்போம். 

mesham_400x225xt

மேஷம்:

இந்த ஆண்டு பல வகைகளில் பணவரவு கிடைக்கும். மிகப்பெரிய மேன்மைகள் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கி நன்மைகள் நடக்கும். பாதகமான சூழல்கள் சாதகமாக மாறும். நண்பர்கள் மூலம் நன்மை கிட்டும். நீண்டகாலமாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழக்கூடிய அமைப்பு உண்டு, பெண்களின் உத்யோகம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரத்தின் மூலம் மேன்மை கிட்டும். உடல் ரீதியான பிரச்னைகள் அதுவாகவே நீங்கும்.

rishibam_400x225xt

ரிஷபம்:

இந்த ஆண்டு மகத்துவமான ஆண்டாக அமையும். தொழிலில் மேன்மை கிட்டும். புதிய தொழில்கள் தொடங்கும் அமைப்பு உண்டு. ஒரு தொழில் நடத்த முடியாமல் கஷ்டப்பட்டவர்கள் கூட, பல தொழில்களை வெற்றிகரமாக செய்வீர்கள். இந்த ஆண்டு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திருமண வயதுடையவர்களுக்கும், திருமணம் தாமதமானவர்களுக்கும் இந்த ஆண்டு பொருத்தமான மண வாழ்க்கை அமையும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை, அன்யோன்யம் அதிகரிக்கும். 

mithunam_400x225xt

மிதுனம்:

இந்த ஆண்டு மிதமிஞ்சிய யோகத்தை கொடுக்கும். கடந்த காலங்களில் பணிந்து இருந்த விஷயங்களில் துணிந்து செயல்படுவீர்கள். உங்களுக்கு சாதகமாக அனைத்தும் நடக்கும். திடீர் பிரபலம் கிடைக்கும். நீண்டகாலமாக திரையுலக ஆசை இருந்தவர்களுக்கு இந்த ஆண்டு அந்த அமைப்பு கிடைக்கும். அனைத்து விஷயங்களிலும் லாபம் கிட்டும். திடீர் யோகங்கள் கிடைக்கும். பல மடங்கு வருவாய் அதிகரிப்பிற்கான வாய்ப்புள்ளது. கூட இருந்து குழிபறிக்கும் நண்பர்களை அறிந்து உஷாராக செயல்படவும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வீண் அவமானங்கள் நீங்கி மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.  மிதுன ராசிக்காரர்கள் இந்த ஆண்டில் ராஜாவாக வாழ்வார்கள். 

kadakam_400x225xt

கடகம்:

இந்த ஆண்டு கஷ்டங்கள் தீர்ந்து, அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். ஆர்ப்பாட்டமில்லாமல் வெற்றிகள் கிடைக்கும். நல்ல சிந்தனை, அறிவின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். அரசியல் தொடர்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் உயர்வு ஏற்பட்டு, வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவில் தடங்கல் இருக்காது. அஷ்டமச்சனி என்றாலும், கிரகங்களின் அமைப்பு சிறப்பாக இருப்பதால் இந்த ஆண்டு கௌரவமாகவே இருக்கும்.

simmam_400x225xt

சிம்மம்:

இந்த ஆண்டு அதிகாரத்தை வழங்கும் ஆண்டாக அமையும். பூர்வீக சொத்து மூலம் நன்மைகள் கிடைக்கும் . பூர்வீக சொத்து பிரச்னைகள் நீங்கி சொத்து கிடைக்கும். சொந்த உழைப்பின் மூலம் சொத்து வாங்கும் அமைப்பு இருக்கிறது. குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி கிட்டும். கடந்தகாலங்களில் தவறிப்போன ஆதாயம் கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும். சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உண்டு.

kanni_400x225xt

கன்னி:

இந்த ஆண்டு எண்ணிப்பார்க்க முடியாத ஏற்றம் கிடைக்கும். மனதில் நினைப்பதை செய்து முடிப்பீர்கள். பேச்சின் மூலம் சாதிப்பீர்கள். ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை கிடைக்கும். குடும்பத்தில் ஆடம்பர தேவைகளைக்கூட பூர்த்தி செய்வீர்கள்.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

படிப்பை நிறுத்திய மாணவர்களுக்கு படிப்பை தொடரும் வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் தேவையில்லாத பேச்சை குறைப்பது நல்லது.

thulam_400x225xt

துலாம்:

இந்த ஆண்டு உங்களுக்கு சாதகமான ஆண்டாக அமையும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். கடந்தகால தவறுகள் மறக்கப்பட்டு உங்களுக்கு நல்லது நடக்கும் . குழந்தைகள் மூலமாக பிரச்னை ஏற்படலாம். எதிர்ப்புகளை தகர்த்து வெற்றி காண்பீர்கள். தடைபட்ட சுப காரியங்கள் நடக்கும். நீதித்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல ஆண்டாக அமையும். வெளிநாட்டு பயணங்களில் இருந்த தடை நீங்கும். 

viruchikam_400x225xt

விருச்சிகம்:

இந்த ஆண்டு நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிறு சிறு கஷ்டங்கள் வந்து நீங்கும். எனவே கவனமாக இருக்க வேண்டும். வேகத்துடன் விவேகமும் முக்கியம். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்கும். மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு மரியாதையும் புகழும் கிட்டும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சொந்த வீடு, நிலம் வாங்கும் அமைப்பு உண்டு. திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்கும்.

dhanusu_400x225xt

தனுசு:

ஏழரை சனியிலிருந்து விடுபட்டுள்ள தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த ஆண்டில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி, தேவைகள் பூர்த்தியாகும் ஆண்டாக அமையும். கடந்தகால பிரச்னைகள் நீங்கும். நட்பு விஷயத்தில் கவனம் தேவை. தொழிலில் நல்ல மேன்மை கிடைக்கும். சேமிப்பு மனநிலை ஓங்கும்.

makaram_400x225xt

மகரம்:

இந்த ஆண்டு நற்பெயர், புகழ் கிடைக்கு. நீங்கள் முயற்சி செய்து ஏங்கிய விஷயங்கள் நடந்தேறும். கடந்த கால அனுபவங்களின் வாயிலாக சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் நன்மை கிடைக்கும். சகோதரர்களின் சுப காரியங்களுக்கு உதவுவீர்கள். உடல் உபாதைகள் ஏற்படும். 

கும்பம்:

சில கஷ்டங்களும், குழப்பங்களும் இருந்தாலும் கூட, சாதிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும் ஆண்டாக இந்த தமிழ் புத்தாண்டு அமையும். பணவரவிற்கு பிரச்னை இருக்காது. நிலம், சொந்த வீடு, வாகனம் வாங்கக்கூடிய அமைப்பு உண்டு. வீட்டுக்கடனை அடைப்பீர்கள். குடியிருக்கும் வீட்டின் உரிமையாளராக வாய்ப்புள்ளது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமண வாழ்வில் கஷ்டப்பட்டவர்களுக்கு சந்தோஷம் கிடைக்கும். தகுதிக்கேற்ப வெளிநாட்டில் நல்ல பணியில் அமரலாம். தந்தை வழி உறவுகளில் கவனம் தேவை. அதனால் கவனமாக இருக்க வேண்டும்.

meenam_400x225xt

மீனம்:

இந்த ஆண்டு தொழில் சிறப்பாக அமையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் ஊதியம் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு சிறப்பில்லை. வேலைப்பளு அதிகரிக்கும். வெளிநாட்டு வேலையில் இருப்பவர்கள் கஷ்டங்களை சமாளித்து பணியாற்றவும்.  உணவில் கட்டுப்பாடு தேவை

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459