பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் நீட்டிப்பு அனுமதி கோரி ஏப்.16 வரை விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

09/04/2023

பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் நீட்டிப்பு அனுமதி கோரி ஏப்.16 வரை விண்ணப்பிக்கலாம்

 

972270

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) நம்நாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகள், தங்களுக்கான அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.


அதன்படி, பொறியியல் கல்லூரிகளுக்கு 2023-24 கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகள் தற்போது தொடங்கியுள்ளன.


அந்தவகையில் புதிய கல்லூரிகள், படிப்புகள் தொடக்கம் மற்றும் அங்கீகாரம் நீட்டிப்பு ஆகியவை தொடர்பாக கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றன. இதற்கான அவகாசம் ஏப்.6-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. எனினும், கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்.16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


அங்கீகாரம் பெறுதல் மற்றும் நீட்டிப்புக்கான அனுமதி கோரி கல்வி நிறுவனங்கள் தேவையான ஆவணங்களுடன் துரிதமாக விண்ணப்பிக்க அபராதத் தொகையுடன் ஏப். 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை / www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459