நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாராத 13 படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




15/04/2023

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாராத 13 படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

 975476


நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவம் சாராத 13 பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது, என கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழிதேவி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.


நடப்பு கல்வியாண்டில் மருத்துவம் சாராத பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான சேர்க்கை நடைபெற உள்ளது.


இதன்படி 3 ஆண்டு பிஎஸ்சி பட்டப்படிப்புகளான, கதிரியக்கம் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம், சுவாச சிகிச்சை, அறுவை அரங்கம், மயக்க மருந்து தொழில்நுட்பம் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், சிக்கலான பராமரிப்பு தொழில்நுட்பம் ஆகிய 6 இளநிலை பட்டப்படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.


மேலும், 2 ஆண்டுகள் படிக்கும் டிப்ளமோ பிரிவில், டிப்ளமோ இன் ரேடியோ டயாக்னசிஸ் டெக்னாலஜி, டிப்ளமோ இன் மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி ஆகிய 2 படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.


மேலும், 1 ஆண்டு படிக்கும், அவசர சிகிச்சை தொழில்நுட்பவியலாளர், மயக்க மருந்து தொழில்நுட்பவியலாளர், ஆபரேசன் தியேட்டர் தொழில்நுட்பவியலாளர், எலும்பியல் தொழில்நுட்பவியலாளர், பல்நோக்கு மருத்துவ பணியாளர் ஆகிய 5 சான்றிதழ் படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.


இந்த சேர்க்கை சம்பந்தமான விவரங்களை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொண்டு விண்ணப்பிக் கலாம் அல்லது நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அலுவல கத்தை நேரில் அணுகி தெரிந்துகொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459