பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 20.03.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: பொறை உடைமை
குறள் எண்: 159
துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
பொருள்:
எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.
பழமொழி :
Brevity is the soul of wit
சுருங்கக் கூறலே அறிவின் ஆன்மா.
இரண்டொழுக்க பண்புகள் :
1. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.
2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்
பொன்மொழி :
மனிதன் எப்பொழுது ஆர்வத்திலிருந்து செயல்படுகிறானோ அப்பொழுது மட்டுமே அவன் சிறந்தவனாகிறான்.
பொது அறிவு :
1. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் எது?
கோலாலம்பூர் (மலேசியா ).
2. யூதர்களின் புனித நூல் எது?
டோராஹ்.
English words & meanings :
Illustrates - to give examples in order to understand easier. verb. எடுத்துக் காட்டுகள் உடன் உள்ள எளிய விளக்கங்கள். வினைச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
கோடைக்காலத்தில் கிடைக்கும் தர்பூசணி ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுவையான பழம். இதில் ஏராளமான ஊட்டச்ச்ததுக்கள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலைத் தாக்கும் ப்ரீ ராடிக்கல்களிடம் இருந்து உடலை பாதுகாப்பதோடு,
ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. கூடுதலாக, தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது கோடையில் உடல் வறட்சியடைவதைத் தடுக்கும்.
கணினி யுகம்
Ctrl + X
Cut the selected item.
Ctrl + C (or Ctrl + Insert)
Copy the selected item.
மார்ச் 13 இன்று
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.
நீதிக்கதை
கதை :
ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது.
அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது.
சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள்.
ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது.
அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது.
முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான்.
இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர்.
சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான்.
இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.
நீதி :
ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.
இன்றைய செய்திகள் - 13.03. 2023
* 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
* மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பெரியகட்டளை கிராமத்தில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால பாண்டியர் கால வட்டெழுத்துடைய கற்செக்கு கண்டறியப்பட்டுள்ளது.
* ஓசூர் வனக்கோட்டத்தில் வனக்குற்றங்களைத் தடுக்க மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் 4 நாள் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்.
* எல்லையில் சீன அச்சுறுத்தல் நீடிக்கிறது - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து.
* தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர்.
* பெண்கள் உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் நிது காங்ஹாஸ், பிரீத்தி, மஞ்சு ஆகியோர் வெற்றி.
* உலக ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி 4-வது இடத்துக்கு முன்னேற்றம்.
* இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ரைபகினா, சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
Today's Headlines
* Finance Minister PDR Palanivel Thiagarajan is scheduled to present the financial statement for the financial year 2023-24 in the Legislative Assembly today at 10 am.
* An early Pandyan era stone inscription dating back to the 9th century has been found in Periyakatlai village near Beraiyur in Madurai district.
* A sniffer unit has been started in Hosur Forest Reserve to prevent forest crimes.
* Tamil Nadu rains for 4 days - Meteorological Department Information.
* Chinese threat persists at border - External Affairs Minister Jaishankar comments.
* So far 13 people have been died in a powerful earthquake in the South American country of Ecuador.
* Indian players Nitu Kanghas, Preeti, Manju won in the women's world boxing.
* Indian team has moved up to 4th place in the world hockey rankings.
* Indian Wells Tennis: Rybakina, Sabalenka advance to finals
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment