பெற்றோரை இழந்த மாணவர்கள் அரசின் உதவித்தொகை பெறுவது எப்படி ? விளக்கம் மற்றும் உதவி - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

09/03/2023

பெற்றோரை இழந்த மாணவர்கள் அரசின் உதவித்தொகை பெறுவது எப்படி ? விளக்கம் மற்றும் உதவி

 ஒரு அரசு பள்ளிஆசிரியரின் குரல்.....முக்கிய தகவல்...அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்கால தேவைக்கு ,குடும்ப சூழலால் பெற்றோரை இழந்த  குழந்தைகளுக்கு தமிழக அரசின் உயர் கல்வி பயில கல்வி நிதி உதவியினை பெற்றுத்தர மனித நேயத்துடன் நம்மால் முடிந்த  ஒரு உதவி செய்யலாமா.......


இதோ அதற்கான விபரங்கள் உங்கள் பார்வையில்.....தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 1முதல் 12ம் வகுப்பு வரை தற்போது கல்வி பயின்று கொண்டிருக்கும் குழந்தைகளில் யாருடைய குடும்பத்திலாவது அவர்தம் பெற்றோரரில் ஒருவரோ அல்லது இருவருமோ சாலை விபத்தில் மரணமடைந்திருந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்திருந்தாலோ,அல்லது எதிபாராவிதமாக  பாம்பு கடித்து இறந்திருந்தாலோ,மின்சாரம் தாக்கி,இடி மின்னல் தாக்கி இறந்திருந்தால் அல்லது எதிர்பாராவிதமாக மரணம் குறிப்பாக கிணற்றில் விழுந்து இறப்பு மரத்தில் இருந்து விழுந்து,இதுபோன்ற  எதிர்பாராத விபத்தினால்   மரணம் சம்பவித்திருந்தால் (காவல்துறை புகார்,உடற்கூராய்வு பரிசோதனை,இறப்பு சான்று அவசியம்)அவர்தம் குடும்பத்தில் அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் அந்த குடும்பத்தை சார்ந்த படிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்  தமிழக அரசு சார்பில் அரசாணை 189நாள் 25/10/2019ன்படி   மாணவர் கல்வி நிதி உதவித்தொகை ருபாய்75000   தமிழக அரசு கல்வித்துறை மூலம் விண்ணப்பித்து இந்த தொகை பெற்றுக்கொள்ள அரசாணை வழி செய்கிறது.  இந்த உதவி தமிழக அரசால் 2005ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது(அரசாணை எண்39 நாள் 30.03.2005)...அரசால் வழங்கப்படும் இந்த தொகை சம்பந்தப்பட்ட மாணவர் பெயரில் அரசு மின் வாரியத்தில் வைப்புத்தொகையாக சேமிக்கப்பட்டு எதிர்காலத்தில் மாணவர் உயர் கல்வி பயில மற்றும் எதிர்கால தேவைக்கு21 வயதானவுடன் வட்டியுடன் கூடிய வைப்புத்தொகையினை மாணவர் பெற்று பயனடையலாம்....இந்த தொகையினை கல்வித்துறை மூலம் மட்டுமே விண்ணப்பித்து பெற முடியும். 


இந்த உதவியினை செய்ய என்ன செய்ய வேண்டும் என்ற விபரங்களை இங்கு உங்களுக்கு தருகிறேன்....உதவுங்கள் ....


இதனை பெற  பெற தயார் செய்ய வேண்டிய ஆவணங்கள்....முக்கிய குறிப்பு


விபத்தில் பெற்றோர்கள் இறந்த நாளன்று அந்த குடும்பத்தில் உள்ள  மாணவர் அரசு பள்ளியில் மாணவராக இருந்திருக்க வேண்டும்(பெற்றோர் இறக்கும்போது மாணவர் அரசு,அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவராக படித்துக்கொண்டிந்தால் மட்டுமே இந்த உதவித்தொகைக்கு  விண்ணப்பிக்க முடியும்..


ஒரு குடும்பத்தில் எத்தனை அரசு பள்ளியில் மாணவர்கள் படித்தாலும் அவர்கள் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக 4 நகல்கள் மேல்நிலை உயர்நிலை பள்ளிகளுக்கும்,  தொடக்க ,நடு நிலை பள்ளிகளுக்கு தயார் செய்ய வேண்டும்.


விண்ணப்பம் .....கீழ்கண்ட விபரங்களை உள்ளடக்கியது...1. மாணவர் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலருக்கு மற்றும தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களுக்கு எழுதும் விண்ணப்ப கடிதம்.2. தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அலுவலருக்கு மாணவர் விண்ணப்பத்தை முன்னிறுத்தி கடிதம்.தொடக்கக் கல்வித் துறைக்கு மட்டும் இக்கடிதம்.பொருந்தும்)


3.  வட்டார கல்வி அலுவலர் ,மாவட்ட கல்வி அலுவலருக்கு தொடக்கக் கல்வித்துறை பரிந்துரை செய்து கடிதம்(தொடக்க கல்வித்துறைக்கு மட்டும் இது பொருந்தும்).


 உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் கடிதம் மட்டும் மாவட்ட கல்வி அலுவலருக்கு இடைநிலை எழுதிய முகப்பு கடிதம் போதுமானது.


4. பயனடையும் மாணவர் சார்பான விபரம்(1பக்கம்)


5. மாணவர் விபரம்.அடங்கிய 2 பக்க விண்ணப்ப படிவம்.


6. படிப்புச் சான்று.


7. முதல் தகவல் அறிக்கை காவல்துறையிடம் பெறப்பட்டது.


8. பிரேத பரிசோதனை அறிக்கை(Post mortem report)


9. இறப்பு சான்றிதழ்


10. விதவை சான்று .


11. வருவாய் முடக்க சான்று( வருமானம் ஈட்டும் தாய் அல்லது தந்தை அல்லது இருவரும்  சாலை விபத்தில் இறந்ததால் குடும்பம் வருமானம் இன்று கஷ்டப்படுவதால் இந்த வருவாய் முடக்கம் இந்த குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ளது.எனவே மாண்வர்களுக்கு கல்வி நிதி உதவித்தொகை பெற இக்குடும்பத்திற்கு வருவாய் முடக்கம் ஏற்பட்டுள்ளது என வட்டாடட்சியர் சான்று பெற வேண்டும்)

. வருமான சான்று 45000 முதல் 60000 க்குள் இருக்குமாறு வேண்டும்.


12.வாரிசு சான்று.


13. உயிருடன் உள்ள பெற்றோர் ஆதார் அட்டை நகல்


14.. பெற்றோர் குடும்ப அட்டை நகல்(civil supply card smart card)


15. உதவித்தொகை கோரும் மாணவர் ஆதார் அட்டை நகல்( student adhaar card )


16. உதவித்தொகை கோரும் மாணவரின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மாணவர் பெயரில் தொடங்கப்பட்டு நடப்பு சேமிப்பு வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் நகல்(வங்கி கணக்கு எண் ,IFSC CODE PRINT செய்யப்பட்டுள்ள பக்கம்)


17.  இணையதளத்தில் இருந்து download செய்யப்பட்ட  3 பக்க TAMILNADU POWER FINANCE CORPORATION வைப்புத்தொகைக்கான் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் .


18.. உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மாணவரின் passport அளவு வண்ண புகைப்படம் 10 copies
மேற்கண்ட அனைத்து விண்ணப்பம் மற்றும் விண்ணப்பங்களில் தொடர்புடைய BEO, அல்லது உயர்நிலை,மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சான்றொப்பமிட வேண்டும்(attestation for every page by the BEO OR HIGH,HIGHER SECONDARY SCHOOL HM ).
உயர்நிலை ,மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு அவர்தம் தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று கல்வி மாவட்ட அலுவலருக்கு அனுப்பி விட்டாலே அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சென்று அங்கிருந்து முதன்மை க் கல்வி அலுவலர் அனுமதி பெற்று சென்னைக்கு அனுப்புவார்கள்.இதில் தொடக்க கல்விக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி)நிலையிலேயே மனு பரிசீலித்து சென்னைக்கு அனுப்பிடுவர்)


சென்னை தொடக்க கல்வி ,மற்றும் பள்ளிக் கல்வி துறை அந்தந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து உடன் 75000 வைப்பு தொகை TNEB ல் செலுத்தி பத்திரம் தயார் செய்து 5 ஆண்டுகளுக்கு வைப்புத் தொகை சான்றை தொடர்புடைய மாணவர் வீட்டிற்க்கு அனுப்பி விடுவர். முன்னுரிமை அடிப்படையில் இந்த மனுக்களை TNEB ல் இருப்பு வைத்ததற்கான வங்கி பத்திரம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி பெற்றோருக்கு வழங்கப்படும்


பின்னர் 18 வயது வரை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 18 வயது வரை புதுப்பித்து வர வேண்டும்.21ம் வயதில் வட்டியுடன் முழுத்தொகை மாணவர்  பெற்று பயன்படுத்தி கொள்ளலாம்


: தமிழக அரசு பள்ளி மாணவர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்திலும் பங்கேற்கும் தமிழக அரசின் அசத்தல் அரசாணைகள்...127/2005,17/2018....


தமிழக அரசு,    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வாழ்வாதாரத்திலும் பங்கெடுத்து அவர்களுக்கு  நிதி உதவி செய்து மாணவர்கள் குடும்பத்தில் பெற்றோர் சாலை விபத்தில் இருந்தாலோ அல்லது மாணவர்கள் சாலை விபத்தில் இருந்தாலோ அவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 75000 மற்றும் ஒரு லட்சம் என நிதி உதவி செய்து அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவும் தமிழக அரசு பங்கெடுத்து வருகிறது.  கடந்த 2005ம் ஆண்டு மற்றும் 2018ம் ஆண்டு முதல் நடைமுறையில்  இருந்து வரும் இந்த இரண்டு  நிதி உதவி திட்டங்கள் மற்றும் . (தமிழக  அரசாணைகள் 39,127/2005 மற்றும் 17 /2018 தான் )இதன் சிறப்பம்சங்கள் என்ன என பார்ப்போம்.தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்தில் உள்ள அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செய்து வருகிறது.

இலவசமாக புத்தகங்கள்,பாடகுறிப்பேடுகள், சீருடைகள் என எண்ணிலடங்கா உதவிகளை செய்து வருகிறது..இதற்காக வருடந்தோறும் பல கோடிக்கணக்கான ரூபாய் நிதியினை தனது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து வருகிறது.


இதில் உள்ள பல நலத்திட்டங்களுள் இலவச  கல்வி என்பதுடன் நில்லாமல்  மாணவர்களின் வாழ்வாதாரத்திற்கும் அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. .தமிழகத்தில் சாலை விபத்தில் பெற்றோர் உயிரிழக்கும்போது அந்த குடும்பத்தில் உயிரிழந்த பெற்றோரால் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்கால உயர்கல்வி பாதிக்கப்படும் என நினைத்த தமிழக அரசு கடந்த 2005ம் ஆண்டு அரசாணை 39,127 /2005 ன் படி ஆணை பிறப்பித்து  பாதிக்கப்பட்ட குடும்பத்தில் அரசு பள்ளியில் பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களுக்கு   ரூபாய்50000 நிதி உதவி அளித்து அந்த நிதியினை வைப்புத்தொகையாக அரசு நிறுவனங்களில் வைத்திருந்து அவர்கள் உயர்கல்வி பயிலும்போது அந்த வைப்புத்தொகையை உயர்கல்வி பயில நிதி உதவித்தொகையாக  வழங்கி வருகிறது. இந்த நிதி உதவித்தொகை கடந்த 2014ம் ஆண்டு  அரசாணை 195/2014  ஆணை வெளியிட்டு 50000 ஆக இருந்த உதவித்தொகையினை ரூபாய் 75000 ஆக உயர்த்தி வழங்கி வருகிறது  என்பது  நம்மில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்....


தமிழக அரசின் மற்றுமொரு அரசாணை 17- (07.02.2018 )ன்படி மாணவர் விபத்தில் இறந்துவிட்டால் அந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சம் பணம் (இழப்பீடு) நிதி உதவி மற்றும் காயமடைந்த மாணவர்களுக்கு 25000 முதல் 50000 வரை நிதி உதவி  அந்த மாணவரின் மருத்துவ செலவினங்களுக்காக அந்த மாணவரின் பெற்றோர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்கான விண்ணப்பம் கல்வித்துறை மூலமாக பெற்றோர் விண்ணப்பித்து பயன் பெற முடியும்.                    தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும்1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர் சாலை விபத்தில் ஒருவரோ அல்லது இருவருமோ விபத்தால் உயிரிழந்தாலோ அல்லது , விபத்தால் நிரந்தர முடக்கம் அடைந்திருந்தால்  அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து ரூபாய்75000 பெறலாம். உயர் கல்வி பயில அரசு வழங்கும் இந்த கல்வி உதவித்தொகை நிதியினை பெறுவதற்கு விண்ணப்பம் கல்வித்துறை வழியாகவே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


மேற்கண்ட இரண்டு மாணவர் ,அவர்தம் குடும்பத்தினர் வாழ்வாதாரம் சார்ந்த திட்டங்களுக்கு விண்ணப்பிக்க சாலை விபத்தில் இறந்த பெற்றோரின் குழந்தைகள் பெற்றோர் இறக்கும்போது தமிழக.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்புவரை ஏதேனும் ஒரு வகுப்பில் படித்துக்கொண்டிருக்க வேண்டும்.விண்ணப்பத்துடன் இறந்த பெற்றோரின் காவல்துறை முதல் தகவல் அறிக்கை,உடற்கூராய்வு சான்று, இறப்பு சான்று,வாரிசு சான்று, வருவாய் முடக்க சான்று,விதவை சான்று (தந்தை இறந்திருந்தால்),வருமானச் சான்று,உயிருடன் உள்ள பெற்றோரின் குடும்ப அட்டை ,ஆதார் அட்டை, மாணவரின் ஆதார் அட்டை, உயிருடன் உள்ள பெற்றோர் மாணவர் இருவரின் பெயரில் இணைத்து தேசிய வங்கி ஒன்றில் துவக்கப்பட்ட சிறுசேமிப்பு கணக்கு எண் விபரம் இந்த சான்றுகளின் நகல்களுடன் பூர்த்தி செய்த 3 பக்க விண்ணப்பம்,பள்ளியில் இருந்து வழங்கப்படும் படிப்புச் சான்று இவற்றுடன் 3.பக்க தமிழ்நாடு மின்விசை கழகத்தின் வைப்புத்தொகைக்கான பூர்த்தி செயத விண்ணப்பம் இவற்றில் மாணவரின் புகைப்படம் இணைத்து பள்ளி தலைமை ஆசிரியர் வழியாக சார்ந்த வட்டார கல்வி அலுவலகம்  வழியாக மாவட்ட கல்வி அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும் .மாவட்ட கல்வி அலுவலர் மாணவரின் விண்ணப்பத்தினை பரிசீலித்து சென்னையில் உள்ள கல்வித்துறை தலைமைக்கு அனுப்புவார்கள் அதற்கான பரிந்துரை செய்த உத்தரவு நகல் பெற்றோர்  மற்றும் சார்ந்த பள்ளிக்கு வழங்கப்படும்.விண்ணப்பத்தினை பள்ளிகல்வித்துறைக்கு பரிந்துரை செய்து அனுப்பியபின்னர் மாவட்டம் முழுவதும் பெறப்பட்ட விண்ணப்பங்களை மாநில முன்னுரிமை  அடிப்படையில் ரூபாய்75000ஐ   5 ஆண்டுகளுக்கான வைப்புத்தொகையாக பத்திரம் தயார் செய்யும் தமிழ்நாடு மின்விசை கழகம் கல்வித்துறை வழியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு வைப்புத்தொகை பத்திரங்களை அனுப்புவார்கள். அந்த வைப்புத்தொகை பத்திரம்  ,விண்ணப்பித்த மாணவரின்குடும்பத்திற்கு வழங்குவர். மாணவரின் வயது 21 ஆகும்போது அந்த வைப்புத்தொகைக்கான வட்டியுடன் 75000 சேர்த்து பணமாக மாணவர் பெற்றுக்கொள்ள இந்த அரசாணை வழிசெய்கிறது. இந்த விண்ணப்பம் தயார்செய்ய விண்ணப்பதாரர் அவர் சார்ந்த வட்டாச்சியரிடம்  வருவாய் முடக்க சான்று பெற வேண்டும்.இந்த சான்று பெற நீண்ட நாட்களாகிறது இதனை எளிமைப்படுத்தினால் காலதாமதம் ஏற்படுவது தவிர்க்கலாம் என இந்த சான்று கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கையாக உள்ளது.


இதேபோல அரசாணை17/2018ன்படி விபத்தால் இறந்துபோன மாணவரின் பெற்றோருக்கு ரூபாய்1 லட்சம் நிதி.உதவி பெற அந்த மாணவர் பயின்ற பள்ளி வழியாக மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வித்துறைக்கு)  முதன்மை கல்வி அலுவலர்(மேல்நிலை கல்வித்துறைக்கு)விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கு ஆவனங்களாக இறந்துபோன மாணவரின் காவல்துறை முதல் தகவல் அறிக்கை இறப்புச்சான்று, வாரிசு சான்று, பெற்றோரின் விண்ணப்பம் ,பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரை கடிதம் ,மாணவரின் ஆதார் அட்டை நகல்,பெற்றோரின் ஆதார் அட்டை நகல், பெற்றோரின் குடும்ப ட்டை நகல் மற்றும்,பெற்றோரின் வங்கி கணக்கு புத்தக  நகல் இவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். சார்ந்த மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க கல்வி  ,அல்லது முதன்மை.கல்வி அலுவலர் பரிந்துரை செய்து பள்ளி கல்வி துறைக்கு அனுப்பி அங்கு அதிகாரிகளின் பரிந்துரை ஏற்று தொடர்புடைய பெற்றோருக்கு நிதி உதவி அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்.இந்த முறை மாணவர் விபத்தால் இறந்துபோனாலோ,கடுமையான அல்லது லேசான காயமடைந்திருந்தாலோ அதற்கேற்றாற்போல் இறப்புக்கு ஒரு லட்ச ரூபாயும்,காயங்களுக்கு 25000 முதல் 50000 வரை நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு திட்டங்கள் குறித்து தமிழக  அரசின் அரசாணைகள் அரசாணை எண் 39/2005,195/2014,1 7/2018 தமிழக அரசால் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் பலருக்கு தெரியாமல் உள்ள நிலையில் , இந்த திட்டம் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு சென்று சேர வேண்டும் என.விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு இதனை பெறுவதற்கு வழிமுறைகளை செய்து வருவதோடு இல்லாமல் பாதிக்கப்பட்ட மாணவர் ,பெற்றோர்களுக்கு இலவசமாக விண்ணப்பித்து மாணவர்கள் ,ஆசிரியர்கள்,பொதுமக்கள் இடையே, விழிப்புணர்வு செய்துவருகிறார் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில் குளவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் அரசு பள்ளி ஆசிரியர்  திரு லி.நாகராஜன்.இவரை 9865149705 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.


இவர் தான் பணிபுரிந்து வரும் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.  

இவர் செய்து வரும் விழிப்புணர்வு மூலம்அரசு பள்ளிகளில் இந்த விபரங்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் தெரிந்து ,தற்போது  பாதிப்புக்குள்ளாகி உள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்  இவர்மூலம் இலவசமாக விண்ணப்பம் பெற்று இந்த திட்டத்தின்கீழ் இன்று வரை பலரும்பயனடைந்து வருகின்றார்கள் என்பது பாராட்டுதலுக்குரியது.இவரை போல அனைவரும் சேவை செய்ய முன்வர வேண்டும் 


🙏✍️ *வருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவம்!!!*


👇👇👇


https://youtu.be/zIizXPKU7fc


▪️தொடக்கக்கல்வி துறைக்கான விண்ணப்பம்- Filled Proposal (2022) - Model 1

    ▪️இடைநிலைக்கல்வி / மேல்நிலை கல்வி துறைக்கான விண்ணப்பம் - Filled Proposal (2022) - Model 2

   ▪️ TN Power Finance - Empty Format Applications


    ▪️மாவட்ட கல்வி அலுவலரின் தெளிவுரை

    ▪️முதன்மை கல்வி அலுவலரின் முகப்பு கடிதம்

    ▪️பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் - கருத்துரு - குறைகள் களைந்து அனுப்ப உத்தரவு செயல்முறைகள்

    ▪️Fund Allotment - Bond Details

    ▪️No Due Certificate from BEO to High School HM    ▪️GO 189, Date: 25.10.2019 | Rs. 75,000 Scholarship GO

   ▪️ GO 195, Date: 27.11.2014 | Rs. 75,000 Scholarship GO

    ▪️GO 127, Date: 01.07.2005 | Rs. 50,000 Scholarship GO

    ▪️GO 39, Date: 30.03.2005 | Rs. 50,000 Scholarship GO


✍️ *Forms Download From Below Link!* CLICK HERE TO DOWNLOAD FORMS

https://www.asiriyarmalar.com/p/rs-50000-scholarship-to-students-for.html

தமிழக அரசின் இந்த திட்டம்.பல ஆண்டுகளாக இருப்பது தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் அறிந்துகொள்ள.வேண்டும்.இதனை.முழுமையாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இந்த விழிப்புணரவு செய்தி...


இந்த உதவியினை நான் இலவசமாக அனைவருக்கும் செய்து தருகிறேன்  .என்னால் முடிந்த ஒரு சிறிய உதவி இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள் .


விண்ணப்பங்களை எனது சார்பில் எங்கிருந்தாலும் தயார் செய்து தருகிறேன்.ஒரு ஏழை குடும்பம் உதவ எனக்கு ஒரு வாய்ப்பு...பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விண்ணப்பிக்க சான்றுகளின் நகல்கள் மட்டும் xerox எடுத்து கொடுத்தால் மட்டும் எனக்கு போதும்.விண்ணப்பம் வங்கி வைப்புத்தொகை விண்ணப்பம் நான் பூர்த்தி செய்து கொடுத்துவிடுகிறேன்.... மாவட்ட கல்வி அலுவலகம் செல்லும்வரை உதவிசெய்கிறேன்....உங்கள் பகுதியில் அரசு பள்ளி,அரசு உதவி பெறும் பள்ளி  மாணவர்களுக்கு உதவுங்களேன்.


நன்றி ....


L. நாகராஜன் 

பட்டதாரி ஆசிரியர் PUMS KULAVAIPATTI

விராலிமலை ஒன்றியம்,புதுக்கோட்டை மாவட்டம்.

9865149705

04.03. 2023

 ALL GOVT ORDERS  & PROCEEDINGSNo comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459