தனியாா் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் சிறுபான்மை அந்தஸ்து பெற மாநில பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறைக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக பொறியியல் பட்டப் படிப்புகள், பாலிடெக்னிக் டிப்ளமா படிப்புகள் நடத்தும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினா் அந்தஸ்து வழங்க வழிமுறைகள் உருவாக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் அத்துறையின் 2022-2023-ஆம் ஆண்டுக்கான மானியக்கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் 29.12.2022-இல் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, சிறுபான்மை பொறியியல் கல்லூரிகள் மற்றும் சிறுபான்மை பாலிடெக்னிக் கல்லூரிகள் சிறுபான்மையினா் அந்தஸ்து பெறுவதற்கு மாநில பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறைக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment