புதிய வருமானவரி முறையில் உச்சவரம்பு உயர்வு - நிதி மசோதா திருத்தத்தில் அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




25/03/2023

புதிய வருமானவரி முறையில் உச்சவரம்பு உயர்வு - நிதி மசோதா திருத்தத்தில் அறிவிப்பு.

.com/

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிதி மசோதாவுடன் 64 திருத்தங்களையும் தாக்கல் செய்தார். அவற்றில் ஒரு திருத்தம் , வருமானவரி திட்டத்தின் புதிய வரிவிதிப்பு முறையை தேர்வு செய்பவர்களுக்கு சலுகை அளிக்கிறது. 


புதிய வரிவிதிப்பு முறையில் , ரூ .7 லட்சம் வரையிலான வருமா னத்துக்கு வரி கிடையாது. ஆனால் , கூடுதலாக ரூ .100 வருமானம் இருந்தால் , அதாவது ரூ .7 லட்சத்து 100 வருமானம் வந்தால் , ரூ .25 ஆயிரத்து 10 வருமான வரி செலுத்த வேண்டும். 

எனவே , கூடுதலாக ரூ .100 வருமானத்துக்கு ரூ .25 ஆயிரத்து 10 வரி செலுத்த வேண்டி உள்ளது. இந்த திருத்தத்தில் , ரூ .7 லட்சத்துக்கு சற்று கூடுதலாக வரு மானம் உள்ளவர்களுக்கு வரிச்சலுகை அளிக்கும்வகையில் , ரூ .7 லட்சத்து 27 ஆயிரத்து 700 வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

IMG-20230325-WA0015

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459