எண்ணும் எழுத்தும் திட்டத்தின் விழிப்புணர்வு வாசகங்கள்..pdf file செய்தியின் கீழ் உள்ளது....
எண்ணும் எழுத்தும் வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு,
✏️ எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் முறைகளை செயல்பாடுகள் மூலம் விளக்கி எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்த விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பள்ளி அளவில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் என்ற நிகழ்வு 20.3.23 & 21.3.23 ஆகிய தேதிகளில் 1,2 & 3 வகுப்பு மாணவர்கள் பயிலும் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற வேண்டும்.
✏️இந்நிகழ்வை மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் 20.3.23 அன்றும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் 20.3.23 மற்றும் 21.3.23 ஆகிய நாட்களில் காலை 9:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நிகழ்வு அட்டவணையில் உள்ளபடி நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
✏️இது சார்ந்த தகவல்களை 1,2 & 3 வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு உரிய முறையில் தெரிவித்து அவர்கள் அனைவரும் எண்ணும் எழுத்தும் கொண்டாட்ட நிகழ்வு நடைபெறும் நாளில் தங்கள் பள்ளியில் கலந்து கொள்வதை உறுதி செய்திட வேண்டும்.
✏️எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளை கையாளும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையை தாங்கள் செய்த கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், மாணவர்களின் படைப்புகள் மற்றும் அரசால் வழங்கப்பட்ட TLM ஆகியவை கொண்டு வகுப்பறையை இன்றே (17.3.23) அழகு படுத்த வேண்டும். இதை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்
✏️மேலும் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் நடைபெறும் நாளன்று 9:45 மணி முதல் 11 மணி வரை என் மேடை என்ற நிகழ்வு நடைபெறும். இதில் மாணவர்கள் தங்கள் எண்ணும் எழுத்தும் பாடப் புத்தகங்களில் உள்ள பாடல்களை தனியாகவோ குழுவாகவோ ஆடல் பாடல் உள்ளிட்ட செயல்பாடுகளை செய்து பெற்றோர்களை மகிழ்விக்க வேண்டும் . ஆகவே இந்நிகழ்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையில் ஆடல் பாடல்களுக்கான எண்ணம் எழுத்தும் பாடல்களை
தேர்வு செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
✏️மேலும் தேநீர் இடைவேளைக்குப் பிறகு நிகழ்வு அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று செயல்பாடுகளில் ஏதேனும் ஒரு செயல்பாட்டை பெற்றோர்களுடன் இணைந்து ஆசிரியர்கள் செய்ய வேண்டியுள்ளளதால் அது சார்ந்தும் திட்டமிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment