ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் டிப்ளமா படிப்போருக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் டிப்ளமா தொடக்க கல்வி ஆசிரியர் பயிற்சி படிப்பான டி.எல்.எட். நடத்தப்படுகிறது.
இந்த படிப்புக்கான தேர்வு அட்டவணையை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. முதலாம் ஆண்டுக்கு ஜூன் 23ம் தேதியும்; இரண்டாம் ஆண்டுக்கு ஜூன் 22ம் தேதியும் தேர்வுகள் துவங்க உள்ளன.
விபரங்களை அரசு தேர்வுத்துறையின் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment