பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டம் தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் கையெழுத்திட மறுப்பு: மத்திய அரசு தகவல் - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

28/03/2023

பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டம் தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் கையெழுத்திட மறுப்பு: மத்திய அரசு தகவல்

.com/

பிஎம் ஸ்ரீ பள்ளி என்பது பள்ளிகளை மேம்படுத்த ஒன்றிய அரசு அறிவித்துள்ள புதிய நிதியுதவி திட்டம். இந்த திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு செப்.5ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் 14500க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும். இந்த திட்டத்தில் இதுவரை 9 ஆயிரம் பள்ளிகள் கல்வி அமைச்சகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளன..JoinTelegram


நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள் உள்பட 2.5 லட்சம் பள்ளிகளில் இருந்து இந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் டெல்லி, மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் இணைவில்லை. எனவே ஒன்றிய அரசின் கல்வி அதிகாரிகள் இந்த 7 மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும் புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஒன்றிய கல்வி அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459