வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரம்: 5 மாணவ மாணவிகள் 5 நாள் இடைநீக்கம்.! - ஆசிரியர் மலர்

Latest

 




09/03/2023

வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரம்: 5 மாணவ மாணவிகள் 5 நாள் இடைநீக்கம்.!

 தருமபுரி மாவட்டம் அமனி மல்லபுரம் அரசு மேல்நிலைபள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக 5 மாணவ மாணவிகளை 5 நாள் இடைநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்காடு அருகே, மாமல்லபுரம் அரசு பள்ளியில் மேசை நாற்காலிகளை உடைத்து ஐந்து மாணவ மாணவிகள் அட்டகாசம் செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானதால் பெற்றோர், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இந்த நிலையில், மாமல்லபுரம் அரசு பள்ளியில் மேசை மற்றும் நாற்காலிகளை உடைத்த 5 மாணவ மாணவிகள் ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தெரிவித்துள்ளார். மாணவ மாணவிகளின் பெற்றோர் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை 5 மாணவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459