ஆசிரியர் தகுதித் தேர்வில் 1.50 லட்சம் பேர் பங்கேற்கவில்லை - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

30/03/2023

ஆசிரியர் தகுதித் தேர்வில் 1.50 லட்சம் பேர் பங்கேற்கவில்லை

 ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வு தாள் 2ல் பங்கேற்க 4 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 கடந்த பிப்ரவரி 3ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடத்தப்படும் என்றும், இந்த தேர்வு முழுக்க முழுக்க ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த தேர்வு எழுத தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 4 லட்சத்து 886 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 4 லட்சத்து 856 பேருக்கு மட்டுமே ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் இ ன்று வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளின் படி , தாள் 2ல் 2 லட்சத்து 54 ஆயிரத்து 224 பேர் மட்டுமே பங்கேற்றதாக ெதரிவித்துள்ளது . அதன்படி 1 லட்சத்து 47 ஆயிரத்து 632 பேர் பங்கேற்கவில்லை என்று தெரியவருகிறது. தேர்வு ந டந்ததற்கு பிறகு விடைக்குறிப்புகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.


 அதன்மீது பிப்ரவரி 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை சந்தேகங்களை தெரிவிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருந்தது. அதன் பேரில் 16 ஆயிரத்து 409 பேர் 1364 கேள்விகள் மீது சந்தேகம் தெரிவித்து இருந்தனர். இவற்றின் மீது வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தேர்வு முடிவுகள் அந்தந்த நபர்களுக்கு தனித்தனியாகவும், இணையத்திலும் வெளியிடப்பட்டது. அதேபோல தாள் ஒன்றுக்கான தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. அதில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் தேர்வு எழுதி, 21 ஆயிரத்து 543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459