பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு நாளை ஹால் டிக்கெட் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

09/03/2023

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு நாளை ஹால் டிக்கெட் வெளியீடு

 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு, இன்றுடன் முடிகிறது. 'மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க, எந்த நன்கொடையும் வசூலிக்க கூடாது' என, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.


பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், வரும் 13, 14ல் துவங்குகின்றன. இந்த வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு, 1ம் தேதி முதல் நடந்து வந்தது; இன்று முடிகிறது.


இதையடுத்து, நாளை ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது. 'ஹால் டிக்கெட் வழங்குவதற்கு, எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது. 'பெற்றோர் ஆசிரியர் கழக நிதி என்றோ, பள்ளி நன்கொடை என்றோ, எந்த பெயரிலும் கட்டணம் வசூலிக்க கூடாது' என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459