TET தேர்வர்கள் போராட்டம்: அரசாணை 149 – ஐ ரத்து செய்ய சரத் குமார் கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/02/2023

TET தேர்வர்கள் போராட்டம்: அரசாணை 149 – ஐ ரத்து செய்ய சரத் குமார் கோரிக்கை

 

sarath-Kumar-TET-16766424153x2

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு மீண்டும் மறுநியமன போட்டி தேர்வு அரசாணை 149 – ஐ ரத்து செய்ய வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்


நிறுவனத் தலைவர் சரத்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " 2018-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு நியமன போட்டி தேர்வு என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலக்கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டிருக்கிறார்கள்.


ஏற்கெனவே, 2013 முதல் 2019 வரை நடந்தேறிய ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சிப் பெற்று பணி நியமனத்திற்காக காத்திருக்கும் ஆசிரியர்களிடம் மீண்டும் ஒரு மறு நியமன போட்டித் தேர்வு வைத்து அவர்களது திறமையை பரிசோதித்து காலவிரயம் செய்வது நியாயமற்றது.


கொரோனா காலக்கட்டத்தில் அரசுப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருந்துள்ளது. ஆனால், அதற்கேற்ப அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை இருக்கிறதா என ஆராய்ந்தால் இல்லை என்பதே கசப்பான உண்மை. பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் நியமனம் அமைந்தால் மட்டுமே,

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

கல்வித்தரத்தை சமநிலையில் மென்மேலும் உயர்த்த முடியும். எனவே, தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் புதிய ஆசிரியர் நியமனங்களை இத்தனை ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி நிறைவேற்றுவதே முறையாகும்.


எனவே, ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சிப் பெற்றோர் நலக்கூட்டமைப்பு சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளான அரசாணை 149 – ஐ ரத்து செய்திடவும், பணி நியமன வயது வரம்பை உயர்த்த வேண்டும் எனவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன். மேலும், நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு கட்சியின் சார்பாக முழு ஆதரவளித்து, கோரிக்கை நிறைவேறும் வரை அரசிற்கு வலியுறுத்தும் முயற்சியில் உடனிருப்போம் என்று தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்


 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459