RTE - இலவச கட்டாயக்கல்வி: தனியார் பள்ளிகளில் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்! - ஆசிரியர் மலர்

Latest

22/02/2023

RTE - இலவச கட்டாயக்கல்வி: தனியார் பள்ளிகளில் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்!

 .com/

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம். 


இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட இடஒதுக்கீட்டின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். 


ஒவ்வொரு ஆண்டும் எல்கேஜி முதல் 1 ஆம் வகுப்பு வரை ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கைகள் நடைபெற்று வருகிறது. அதற்கான கட்டணத்தை அந்த அந்த பள்ளிகளுக்கு அரசே செலுத்தி வருகிறது. 


இந்நிலையில், 2023- 24 ஆம் ஆண்டுக்கான ஆண்டிற்கான 25 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வரும் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 


2023-24 ஆம் ஆண்டிற்கான 25 சதவீத இடங்களுக்கு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி வரை ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 


இந்நிலையில், தனியார் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம் தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். 


அதில், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு கடந்த 2 ஆண்டுகளாக வழங்கவில்லை. இந்நிலையில், 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித்துறை தயாராகி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. 


எனவே, நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு விடுவிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், 25 சதவீத இலவச சேர்க்கையை தனியார் பள்ளிகளில் தொடர்வது குறித்து பரிசீலனை செய்ய வேண்டிய நிலை வரும் என்று தெரிவித்துள்ளார். 

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459