Chat GPT என்றால் என்ன?.... இது எப்படி வேலை செய்கிறது?.... இதோ சில சுவாரஸ்யமான தகவல்கள்....! - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/02/2023

Chat GPT என்றால் என்ன?.... இது எப்படி வேலை செய்கிறது?.... இதோ சில சுவாரஸ்யமான தகவல்கள்....!

 IMG-20230213-WA0000

இப்போது இணைய உலகை கலக்கிக்கொண்டு இருக்கும் ஒரு தொழில்நுட்பம் “Chat GPT” என்கிற ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சாட் புரோகிராம். 


இந்த Chat GPT மூலமாக யார் வேண்டுமானாலும் ஒரு கணக்கை உருவாக்கி உரையாடல் நிகழ்த்திட முடியும்.  


இணையவாசிகள் மத்தியில் பிரபலமான chat GPT என்றால் என்ன அது எப்படி வேலை செய்கிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.


இன்றைய உலகமே ஆட்டோமெஷினில் மூழ்கும், இனி அனைத்து வேலைகளையும் இயந்திரங்கள் மட்டுமே செய்யும். 


விரைவில் மனிதர்கள் வேலையை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும் தொழில்நுட்பத்தை குறித்து சிலர் அச்சப்படுவதை நாம் பலரும் பார்த்திருப்போம். 


ஆனால் அதே தொழில்நுட்பம் இன்று மனிதர்களின் அறிவையும் கற்றல் திறனையும் பாடங்கள் பயிற்றுவிப்பதிலும் பெரிய பெரிய ஆராய்ச்சிகளையும் அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.


அதில் ஒன்றுதான் chat GPT என்று அழைக்கப்படும் சாட் ஜெனரேட்டிவ் ப்ரீ - டிரெரின்ட் ட்ரான்ஸ்பார்மர். சாட் பாட் மற்றும் மெய்நிகர் உதவியாளர்கள் அனைத்தும் உங்களோடு உரையாடும் தொழில்நுட்பத்தின் முகங்கள் என்றால் ஜி பி டி அதன் உயிர் நாடி அல்லது அதன் மையத் தொழில்நுட்பம் என்று கூறலாம்.


அதாவது நாம் கொடுக்கும் உள்ளிட்டை புரிந்து கொண்டு இயற்கையான மொழியில் சொற்களை கோர்த்து விடை தரும் ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் இந்த ஜிபிடி. இதற்கு நிறைய தரவுகள் குறிப்பாக வரி வடிவ மற்றும் சொல் வடிவ தரவுகள் கொடுக்கப்படும். அதன் பிறகு ஜிபிடி டிரான்ஸ்பார்மர் என்ற அல்காரிதத்தை பயன்படுத்தி ஒரு மனிதன் விடையளிப்பது போல தன்னிடம் இருக்கும் தரப்புகளை பயன்படுத்தி பதில் சொல்ல கற்றுக் கொள்ளும்.


பொதுவாக பல தரப்பட்ட கட்டுரைகள் மற்றும் உரையாடல்கள் gpt க்கு வழங்கப்படும். அதனை பயன்படுத்திக் கொண்டு மொழியின் கட்டமைப்புகளையும் வடிவங்களையும் கற்றுக் கொள்ளும். இந்த புதிய தொழில்நுட்பம் போதுமான அளவுக்கு மொழியை குறித்து உணர்ந்து கொண்ட பிறகு கேட்கும் கேள்விகளை பொறுத்து சொந்தமாக தன் சொல் வங்கியில் இருந்து பதங்களை பயன்படுத்தி பதிலளிக்க தொடங்கும்.


அதாவது உதாரணத்திற்கு இன்றைய வானிலை எப்படி உள்ளது என ஜி பி டி இடம் நீங்கள் கேட்டால், இன்றைய வானிலை தெளிவாகவும் 75 டிகிரி பேரன்ட் சீட் செல்சியஸ் தட்பவெப்ப நிலையுடன் வெப்பமாகவும் உள்ளது என விடை தரும். இதற்கு காரணம் ஜிபிடி தொழில்நுட்பம் வானிலை குறித்த விஷயங்களை கற்றுக் கொண்டு விட்டது. அதை எப்படி ஒரு மனிதன் சொல்வதைப் போல கோர்வையாக வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டுள்ளது.


ஜிபிடி தொழில்நுட்பம் டிரான்ஸ்பார்மர் என்ற அல்காரிதத்தை பயன்படுத்தி வருகிறது. இந்த அல்காரிதம் நியூரல் நெட்வொர்க்கின் அடிப்படையில் இயங்குகின்றது. இது ஒரு வகையான கணினி ப்ரோக்ராமில் தான் என்றாலும் அது மனித மூளை வேலை செய்வதை ஒட்டி வடிவமைக்கப்பட்டது. இந்த அல்காரிதத்தால் தரவுகள் மற்றும் வரிவடிவங்கள் போன்றவைகளை பகுத்தாய்ந்து புரிந்து கொள்ள முடியும்.


அதனை பயன்படுத்தி மனிதர்கள் பேசுவதை போன்ற உரையாடல்களை ஜிபிடி உருவாக்கும். ஜிபிடி என்பது ஒரு வகையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகும்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

இதனால் மனிதர்கள் பேசும் மொழியை புரிந்து கொண்டு அதே சொற்களை பயன்படுத்தி தெளிவாக பதிலளிக்க முடியும்.


GPT ஆனது கட்டுரைகள், கதைகள் என பலவற்றை உருவாக்க பயன்படுகிறது. கட்டுரைகள்  உருவாக்குபவர்களுக்கு நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துகிறது. யார் வேண்டுமானாலும் இலவசமாக கணக்கை உருவாக்கி Chat GPT யை பயன்படுத்த முடியும்.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459