உங்கள் பகுதியின் மின் வாரிய பராமரிப்பு பணியை முன்பே தெரிந்துகொள்வது எப்படி? - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/02/2023

உங்கள் பகுதியின் மின் வாரிய பராமரிப்பு பணியை முன்பே தெரிந்துகொள்வது எப்படி?

 மின் வாரியத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் தொடர்பான விவரங்களை வலைதளம் மூலம் தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தமிழக மின் வாரியம், துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை அனுப்பி, மின் மாற்றி, மின் விநியோகப் பெட்டி உதவியுடன் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. மின் வாரிய சாதனங்களில் எப்போதும் மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் இருக்கும். அவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்.

16757743533079

பராமரிப்பு பணி நடைபெறும் நாட்களில், குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்த விவரம் பத்திரிகைகள் மூலமாக நுகர்வோருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். இந்நிலையில், மின் வாரியத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் தொடர்பான விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

16757743773079

இதன்படி  https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml என்ற வலைதளத்தில் உங்களின் மின் பகிர்மான வட்டத்தை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்த உடன் அந்த மாதத்தில் உங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணி தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். இதன்மூலம் மின் தடை தொடர்பான விவரங்களை பல நாட்களுக்கு முன்பாக தெரிந்துகொள்ள முடியும்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459