விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
பேட்டி
இந்நிலையில் தஞ்சையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் எனவும் அவர் மனைவி மற்றும் மகளுடன் நலமுடன் இருக்கிறார்கள்
அதுமட்டுமின்றி அவருடைய குடும்பத்தாருடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அவர்களுடைய அனுமதியுடன்தான் நான் இத்தகவலைத் தெரிவிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்
மேலும் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையைத் தரும் எனவும் விரைவில் பிரபாகரன் தமிழீழம் தொடர்பாக விரிவான அறிக்கையை வெளியிடுவார். ஆனால் பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்பதை இப்போதைக்கு அறிவிக்க முடியாது.
பிரபாகரன் மக்கள் முன் தோன்றும்போது தமிழக அரசு அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment