இல்லம் தேடி கல்வி திட்ட விபரம் தனியார் நிறுவனத்திற்கு அனுமதி - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

24/02/2023

இல்லம் தேடி கல்வி திட்ட விபரம் தனியார் நிறுவனத்திற்கு அனுமதி

.JoinTelegram  தமிழக அரசின், 'இல்லம் தேடி கல்வி திட்டம்' விபரங்களை, தன்னார்வ நிறுவனங்கள் சேகரிக்க, பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.


கொரோனா ஊரடங்கு நேரத்தில், பள்ளிகள் செயல்படாமல் இருந்த போது, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக, மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தின.


அரசு பள்ளி மாணவர்களுக்கு, நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் கற்பித்தல் பணி நடக்கவில்லை.


இதனால், கற்றலில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில், மாலை நேர வகுப்புகளை நடத்த, இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகமானது.


ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் செலவிலான திட்டம், இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.


இதில், தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாணவர்களின் வீடுகளுக்கு அருகேயுள்ள பொது இடங்களில், செயல்முறை கற்பித்தல் மற்றும் மாலை நேர டியூஷன் வகுப்புகளை நடத்துகின்றனர்.


இத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர், குடியிருப்பு விபரம், பயிற்சி பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் விபரம், திட்டம் சார்ந்த கல்வி அலுவலர்கள், பெற்றோர், ஆசிரியர் மற்றும் அதிகாரிகளின் மொபைல் போன் எண்கள் உள்ளிட்ட தகவல்களை, தரவுகளாக சேகரிக்க தன்னார்வ நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.


இதற்காக, அந்த நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில், சென்னையில் செயல்படும் தனியார் நிறுவனத்துக்கு, தகவல்களை சேகரித்து கொள்ள, பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.


இம்மாதம் முதல் ஏப்ரல் வரை தகவல்களை சேகரித்து கொள்ளலாம்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459