பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் திரும்பப் பெற தமிழகத்துக்கு மட்டும்தான் வாய்ப்பு. - ஆசிரியர் மலர்

Latest

25/02/2023

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் திரும்பப் பெற தமிழகத்துக்கு மட்டும்தான் வாய்ப்பு.

  .JoinTelegram மாநிலங்களால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு செலுத்தப்பட்ட தொகையை திரும்ப மாநில அரசிற்கு தர முடியாது என்று உறுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியுள்ளார்.


என் பி எஸ் என்னும் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு செலுத்தப்பட்ட தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் எங்கள் மாநில ஊழியர்களின் ஓய்வூதிய பணத்திற்கு பாதுகாப்பு இல்லை என்று சில மாநில முதல்வர்கள் கூறியுள்ளனர்.


நாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப கொடுங்கள் நாங்கள் பழைய ஓய்வு ஊதிய திட்டத்திற்கு திரும்புகிறோம் என்ற அவர்களது கோரிக்கைக்கு மத்திய நிதியமைச்சர் அளித்துள்ள பதில்" செலுத்திய பணத்தை ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வேண்டுமானால் தருவோமே தவிர மாநில அரசுக்கு தரமாட்டோம்" என்பதாகும். மோசடி சீட்டு கம்பெனிக்கார்களை போல பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்புவது கேள்விக்குறிதான்.


ஆனால் இன்றைய ஒன்றிய நிதி அமைச்சரின் கூற்றின்படி பார்த்தால் தமிழக அரசு இன்றைய தேதி வரை பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதியை மத்திய அரசின் பி எப் ஆர் டி ஏ விற்கு செலுத்தவில்லை. ஆகவே மாநில அரசு நினைத்தால் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்பப்படும் என்பதற்கு இன்றைய ஒன்றிய நிதி அமைச்சரின் அறிக்கை உதவியாக இருக்கும்.


இன்று காலை  சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.பிரடெரிக் ஏங்கல்ஸ் அவர்களுடன் இதுகுறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தேன்.


அவர் கூறியதாவது அரசுக்கு மனமில்லை மனம் இருந்தால் கொடுக்கலாம். கொடுக்காமல் இருப்பதற்கான காரணங்களை ஒன்றிய நிதி அமைச்சர் கூறியுள்ளதாக கூறினார்.


சட்டங்கள் மக்களுக்காகவா அல்லது மக்கள் சட்டங்களுக்காகவா?


மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் பெரும்பான்மை உள்ள அரசாங்கங்கள் தாங்களாக சட்டத்தை திருத்தலாமே?


நாகை பாலா


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459