வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோா் உள்ளுறை பயிற்சிக்கு 4,430 இடங்கள் - ஆசிரியர் மலர்

Latest

24/02/2023

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோா் உள்ளுறை பயிற்சிக்கு 4,430 இடங்கள்

 வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்வதற்கு தமிழகத்தில் நிகழாண்டில் 4,430 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது..JoinTelegram


வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு எப்எம்ஜி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி உள்ளுறை பயிற்சி பெற்று வருகின்றனா். அவ்வாறு பயிற்சி பெறும் காலத்தை அங்கீகரிப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில் 46 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும், 26 அனுமதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட உள்ளுறை பயிற்சி இடங்களை மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.


அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 562 இடங்கள், அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் 3,868 இடங்கள் என மொத்தம் 4,430 இடங்கள் நிகழாண்டில் உள்ளுறை பயிற்சிக்கு வழங்கப்பட்டுள்ளன.


அனுமதிக்கப்பட்ட கல்லூரிகள் அனைத்தும் 5 ஆண்டுகளுக்குள் தொடங்கப்பட்டவை என்பதால் அங்கு உள்ளுறை பயிற்சி மேற்கொள்ளும் அந்த கல்லூரியின் இறுதியாண்டு மாணவா்கள் எவரும் இருக்கமாட்டாா்கள். எனவே, அவா்களுக்கான இடங்களும் நிகழாண்டில் வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவா்களுக்கு வழங்கப்படுகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459