மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு? - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/02/2023

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு?

 



மத்திய அரசு, ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, அகவிலைப்படியை, 4 சதவீதம் உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


விலைவாசி உயர்வை ஈடு செய்ய, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி, ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்பட்டு, உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ௩௮ சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கடந்த முறை திருத்தமானது, செப்டம்பர் ௨௮ல் மேற்கொள்ளப்பட்டு, ஜூலை ௧ முதல் அமல்படுத்தப்பட்டது.


இது குறித்து அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொதுச் செயலர் சிவகோபால் மிஷ்ரா கூறியதாவது:


தொழிற்சாலை பணியாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீடு, ௨௦௨௩, ஜன., ௩௧ல் வெளியிடப்பட்டது. இதனடிப்படையில், ௪.௨௩ சதவீதம் அகவிலைப்படி அதிகரிக்க வேண்டும். எனவே, அகவிலைப்படி உயர்வானது நான்கு சதவீதமாக இருக்கும். அதாவது, நடப்பு ௩௮ சதவீதத்தில் இருந்து ௪௨ சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இந்த உயர்வு, ஜன., ௧ முதல் அமல்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459