கணக்கு துறையில் உள்ள நேரடி நியமன கணக்கு அலுவலர்கள் நிலையில் உள்ள 23 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

23/02/2023

கணக்கு துறையில் உள்ள நேரடி நியமன கணக்கு அலுவலர்கள் நிலையில் உள்ள 23 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியீடு

 .. Join Telegramதமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கருவூல கணக்கு துறையில் உள்ள நேரடி நியமன கணக்கு அலுவலர் முன்கொணர்வு காலிபணியிடங்களை விரைவில் நிரப்பும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமன கணக்கு அலுவலர்கள் (வகுப்பு III) நிலையில் உள்ள 23 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அவற்றில் 17 பணியிடங்கள் முன்கொணர்வு பணியிடங்கள் ஆகும். இந்தப் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி பட்டயக் கணக்கர், விலை மதிப்பீட்டுக் கணக்கர் ஆகும். அவர்களில் 12 பேருக்கு பணி நியமன ஆணை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் இன்று வழங்கப்பட்டது. இவற்றுள், 10 பணியிடங்கள் ( MBC / DC - 02; SC - 07; BC (M) - 01) முன்கொணர்வு பணியிடங்கள் ஆகும்.


பத்து ஆண்டுகளுக்கு மேலான நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முன்கொணர்வு காலிப்பணியிடங்களை நிரப்ப உண்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிதித் துறை, மனிதவள மேலாண்மை துறை மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த முயற்சியே இதற்கு வழிவகுத்தது. புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள், 6 மாதங்களுக்கு கட்டாய பயிற்சி பெற வேண்டும். மறுசீரமைக்கப்பட்ட பயிற்சித் திட்டமானது அரசாணை (நிலை) எண். 42, நிதி (க.க. - 3) துறை, நாள்:16.02.2023 மூலம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459