2009 நியமன ஆசிரியர்கள் ஊதியக் குறைகளை களைய ஒருங்கிணைப்புக்குழு கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

22/02/2023

2009 நியமன ஆசிரியர்கள் ஊதியக் குறைகளை களைய ஒருங்கிணைப்புக்குழு கோரிக்கை



  19.02.2023 அன்று திருச்சியில் நடைபெற்ற  2009 இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி



1. கூட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து ஆசிரியர் நண்பர்களது கருத்தும் நிரந்தர தீர்வுக்காக நீதிமன்றத்தை அணுகுவது சரியானதாக இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.


2. தமிழக அரசு நியமித்துள்ள  இளநிலை ஆசிரியர் ஊதிய குழுவினை சந்தித்து , 2009 ஆண்டு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனமானது 2008 Recruitment Selection process  (4500-125-7000 -Pay band) தொடர்பானவை என்றும்,


2012,2014 இல் பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின்  Recruitment Selection Process( 5200-2800- 20200)  வெவ்வேறானதாகும் என்பதை நாம் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளோம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.



3. ஒட்டுமொத்தமாக 2009 மற்றும் TET இடைநிலை ஆசிரியர்களின்  ஊதிய பிரச்சினை என்று பொத்தாம் பொதுவாக ஒன்றுபட்டதாக கூறப்படுவது நியாயமற்றது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.


4. மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர், மதிப்புமிகு. நிதித்துறை செயலர், மற்றும் உயர்திரு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை நேரில் சந்தித்து இது குறித்து உண்மையான, தெளிவான  Representation சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது.


5. தற்போது நியமிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் தொடர்பான ஊதிய குழுவின் கால வரையறை குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.


6.2009 இல் நியமிக்கப்பட்ட 6800+ 1500 மற்றும் அதே ஆண்டில் பணி நியமனம் பெற்ற இதர இடைநிலை ஆசிரியர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அவர்களுக்கு ஊதிய முரண்பாடு குறித்த உண்மை நிலை அறிய பிரசுரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.



7.Recruitment  Selection Process இன் வெளிப்படை தன்னையினை அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கருத்தும் வைக்கப்பட்டது.


8.2009 இடைநிலை ஆசிரியர்கள் சார்பாக ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு விரைவில் உயர் அலுவலர்களை சந்திக்க பதிவு செய்யப்பட்ட அமைப்பாக உருவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

இப்படிக்கு

2009 நியமன ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழு

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459