அங்கன்வாடி மையங்களில் 2 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அரசு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/02/2023

அங்கன்வாடி மையங்களில் 2 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அரசு அறிவிப்பு

 anganwadi-16759325233x2


தமிழ்நாட்டில் 54,439 அங்கன்வாடி பணியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 44,628 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.


நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில், ஒப்புதல் செய்யப்பட்ட  அங்கன்வாடி பணியாளர்கள்(Aganwadi Workers) எண்ணிக்கையில்  1,27,891 இடங்கள் நிரப்பபடாமல் உள்ளன என்றும், 1,14,287 அங்கன்வாடி உதவியாளர்கள்(Aganwadi Helpers) பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அங்கன்வாடி சேவைகள்  : 1975ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் 106வது பிறந்தநாளில்  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டது.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

இத்திட்டத்தின் கீழ் 6 வயது வரையிலான குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெற்று வருகின்றனர்.


இந்த திட்டத்தின் மைய நாடியாக அங்கன்வாடி மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ். 49,499 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 4940  குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தம்  54,439 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  தேசிய அளவில் இந்த எண்ணிக்கை 13.9 லட்சமாக உள்ளன.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459