தமிழகத்தில் 19 நகரங்களில் 5ஜி சேவையினை விரிவுபடுத்தியது ஜியோ! - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

01/02/2023

தமிழகத்தில் 19 நகரங்களில் 5ஜி சேவையினை விரிவுபடுத்தியது ஜியோ!


5G_dervice_tnie_Edi.jpg?w=360&dpr=3

நாடு முழுவதும் மேலும் 34 நகரங்களுக்கு ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் விரிவாக்கம் செய்துள்ளது. 


இந்தியாவில் 5G சேவைகளின் முன்னோடியாக ரிலையன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரே நாளில் கூடுதலாக 34 நகரங்களில் ட்ரூ (TRUE) 5G சேவைகளை வழங்கியுள்ளது. 


இதில், தமிழ்நாட்டில், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 


இதன்மூலம் தமிழகத்தில் 19 நகரங்களில் ட்ரூ  5ஜி சேவை கிடைக்கிறது. தற்போது 225 நகரங்களில் ஜியோ பயானாளர்கள் ட்ரூ 5G சேவைகள் மூலம் பயன்பெற்று வருகின்றனர். 


வெறும் 120 நாட்களில் இது சாத்தியமானதாக தெரிவித்துள்ள ஜியோ நிறுவனம், இது தங்களது அடுத்த மைல்கல் எனக் குறிப்பிட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459