அயலகத் தன்னார்வல தமிழ் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி: அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் - ASIRIYAR MALAR

Latest

Education News

13/01/2023

அயலகத் தன்னார்வல தமிழ் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி: அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

  

IMG_20230112_180719

அயலகத் தன்னார்வல தமிழ் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி என்ற கல்வித் திட்டம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இணையவழியில் வழங்கப்படவுள்ளது. அயலகத் தமிழர் தினம் 2023ஐ முன்னிட்டு, இன்று (12.01.2023) சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.


தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ் இணையக் கல்விக்கழகம், அயலக மாணவர்களுக்களின் தமிழ் கற்றல்-கற்பித்தலுக்காகத் தமிழ் பரப்புரைக் கழகத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அயலகத் தன்னார்வல தமிழ் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி என்ற கல்வித் திட்டம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இணையவழியில் வழங்கப்படவுள்ளது. அயலகத் தமிழர் தினம் 2023ஐ முன்னிட்டு, 12.01.2023 அன்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் அவர்களும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் மூ. சௌந்தரராஜன் அவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்வில் அயலகத் தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459