சர்க்கரைப் பொங்கல் தயார் செய்யும் முறை - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/01/2023

சர்க்கரைப் பொங்கல் தயார் செய்யும் முறை

 


தேவையானவைஅரிசி - 250 கிராம், வெல்லம் - 500 கிராம், நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரி - 20, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, உலர்ந்த திராட்சை - 20, பால் - 200 மில்லி, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.



செய்முறை: அரிசியை லேசான சூட்டில் வறுக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு... பாலும் தண்ணீரும் சேர்த்து நான்கு பங்கு என்ற அளவில் விட்டு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை பொடித்து தண்ணீர் விட்டு, சிறிது கொதித்தவுடன் வடிகட்டி, உருட்டும் பதம் வரும்வரை பாகு காய்ச்சவும். வேக வைத்த சாதத்துடன் பாகு சேர்த்து... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். உலர்ந்த திராட்சையை சிறிதளவு நெய்யில் வறுத்துப் போடவும். குங்குமப்பூ மற்றும் மீதமுள்ள நெய்யை சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: அம்மனுக்கு பூஜை செய்யும்போது இந்தப் பொங்கல் மிகவும் சிறந்தது. விருப்பப்பட்டால், சிறிது பச்சைக் கற்பூரம் சேர்க்கலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459