04.01.2023 பிற்பகல் முதல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். - ஆசிரியர் மலர்

Latest

02/01/2023

04.01.2023 பிற்பகல் முதல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 04.01.2023 பிற்பகல் முதல் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு


 மார்ச் / ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் 6 மார்ச் 7 ஏப்ரல் ஆண்டு (+2) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் விவரங்களடங்கிய பட்டியலில் மாணவர்களின் பெயர் சேர்த்தல் (By Transfer) / நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 27.10.2022 முதல் 07.11.2022 வரையிலான நாட்களில் வாய்ப்பு வழங்கப்பட்டது.


அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட மார்ச் / ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் மற்றும் +1 Arrear பெயர் பட்டியலினையும், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 04.01.2023 - 2 PM முதல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான www.dge1.tn.gov.in - க்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password -ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்திடுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459