ஆசிரியர் சங்கம் உண்ணாவிரதம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

06/12/2022

ஆசிரியர் சங்கம் உண்ணாவிரதம் அறிவிப்பு

 ஊதிய உயர்வு கோரி, வரும் 27ம் தேதியில் இருந்து, தொடர் போராட்டம் நடத்தப்படும் என, அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின், மாநில பொது செயலர் ராபர்ட் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், 2009 ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏற்கனவே பணியாற்றும் மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கவில்லை.

எனவே, 'சம வேலைக்கு, சம ஊதியம்' என்ற கோரிக்கைக்காக தொடர்ந்து, அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

தற்போது, மத்திய அரசின் துப்புரவு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் தான், எங்களுக்கும், வழங்கப்படுகிறது. மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவதை விட, எங்களுக்கு ஊதியம் குறைவாக உள்ளது.

ஒரே பதவி, ஒரே பணியில் உள்ளவர்களுக்கு, சம ஊதியம் வழங்க, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்தபின், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

எனவே, இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 27ம் தேதி முதல், சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459