கணித புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி பாடப்பகுதி : பள்ளிக்கல்வித்துறை விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

02/12/2022

கணித புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி பாடப்பகுதி : பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

IMG-20221202-WA0007


ஆறாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ரம்மி குறித்த பாடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ரம்மி பாடப்பகுதியை நீக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


ரம்மி விளையாட்டுக்களால் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதன் காரணமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்து தமிழக அரசு சட்டமன்றத்தில் அவசர சட்டம் இயற்றியது. இன்னும் அதற்கு ஆளுநர் அனுமதி தராத நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள கணித பாட புத்தகத்தில் ரம்மி எப்படி விளையாடுவது என்பதை கற்று தரும் வகையில் படங்கள் இடம் பெற்றுள்ளது.  

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டம் இயற்றி கொண்டிருக்கும் நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை பாடபுத்தகத்தில் ரம்மி குறித்த பாடம் இருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்: 

ஏற்கனவே இந்த பாடப்பகுதி இருந்துள்ளது. தற்போது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதால் காரணமாக இதனை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், அடுத்த கல்வியாண்டில் இந்த பாடப்பகுதி இருக்காது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459