தமிழ் பேராசிரியர்கள் இன்ஜினியரிங் கல்லூரியில் நியமனம் - ஆசிரியர் மலர்

Latest

21/11/2022

தமிழ் பேராசிரியர்கள் இன்ஜினியரிங் கல்லூரியில் நியமனம்

 

சென்னை-இன்ஜினியரிங் படிப்பில், கட்டாய தமிழ் பாடம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், தமிழ் பாடம் நடத்தும் உதவி பேராசிரியர்களை நியமிக்க, இன்ஜினியரிங் கல்லுாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளன. தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்புகள் நடத்தப்படுகின்றன. அண்ணா பல்கலை, ஏற்கனவே அமல்படுத்திய பாடத் திட்டத்தில், இன்ஜினியரிங் தொடர்பான தொழில்நுட்ப பாடங்கள் மட்டும் இடம் பெற்றன; மொழி பாடங்கள் இடம் பெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டில் இருந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, புதிய பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்த பாடத் திட்டத்தின்படி, முதலாம், இரண்டாம் செமஸ்டர் தேர்வு மாணவர்களுக்கு, தமிழ், தமிழர் பண்பாடு, நாகரிகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் தமிழ் ஆகிய இரண்டு பாடங்கள் கட்டாய பாடமாகி உள்ளன.


  இதைத் தொடர்ந்து, இந்த பாடங்களை நடத்துவதற்கு, தமிழ் பாடத்தில் யு.ஜி.சி., தகுதி பெற்ற உதவி பேராசிரியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, அண்ணா பல்கலை மற்றும் பிற இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தமிழ் பாடத்தில் ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்களை, தமிழ் உதவி பேராசிரியர்களாக நியமிக்க, ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. இதற்கான முறையான உத்தரவு, விரைவில் வெளியாகும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459