தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!! - ஆசிரியர் மலர்

Latest

04/11/2022

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

 சென்னை: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

இன்று 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: 

11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கையில் மிக கனமழை பெய்யக்கூடும். 

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: 

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். 

நாளை 15 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு: 

தமிழ்நாட்டில் நாளை 15 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459