10 ம் வகுப்பு தனி தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

10/11/2022

10 ம் வகுப்பு தனி தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு பயிற்சி வகுப்பில் சேர, தங்கள் பெயர்களை 15ம் தேதி முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள்  இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை: 


2023 ஏப்ரல் மாதம் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ள நேரடித் தனித் தேர்வர்கள்( முதன் முறையாக எழுதுவோர்), ஏற்கெனவே 2012க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்களும் அறிவியல் பாட செய்முறைத் பயிற்சியில் சேர 15ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம். பயிற்சி நடக்கும் நாள் மற்றும் மைய விவரங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். செய்முறைப் பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.in என்ற இணைய தளத்தில் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து அந்தந்த கல்வி அலுவலரிடம் தேர்வர்கள் ஒப்படைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459