மாணவர்களுக்கு நவம்பர் முதல் வாரத்தில் காலணி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

16/10/2022

மாணவர்களுக்கு நவம்பர் முதல் வாரத்தில் காலணி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

 

திருக்காட்டுப்பள்ளி, அக். 14: பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் முதல் வாரத்துக்குள் காலணிகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், செல்லப் பன்பேட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப் புத் துறை சார்பிலான சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற் றது. முகாமுக்கு திருவையாறு எம்எல்ஏ துரை. சந் திரசேகரன் தலைமை வகித்தார். ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர், தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம் முன்னிலை வகித்தனர்.


முகாமை தொடக்கி வைத்து, சிறந்த கால்நடை வளர்ப்பாளர்க ளுக்கு பரிசுகள் வழங்கிய அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் முதல் வாரத்துக்குள் காலணிகள் வழங்கப்படும். டிசம்பர் மாதத்துக்குள் புத்தகப் பைகள் கொடுக்கத் தொடங்கி ஜனவரிக்குள் முழுமையாக வழங்கப்படும். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கிய இரு வாரங்களுக்குள் அனைத் துப்பொருள்களும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தமிழ்தான் திராவிடம்; அதற்கு இழுக்கு வருமேயானால் முதல்வ ரின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் தோறும் போராட்டங்கள் நடத் தப்படும் என்றார்.

No comments:

Post a Comment