அறிவுரை கூறும் ஆசிரியர்கள், பெற்றோரை தாக்கும் சூழல் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

24/10/2022

அறிவுரை கூறும் ஆசிரியர்கள், பெற்றோரை தாக்கும் சூழல்

 பள்ளி மாணவரை நல்வழிப்படுத்த நன்னெறி கல்வி மிகவும் அவசியம்


மதுரை, அக். 19: ஆசிரியர், பெற்றோரை தாக்கும் சூழல் உள்ளதால் மாண வர்களை நல்வழிப்படுத்த நன்னெறி கல்வி அவசி யம் எனக் கூறியுள்ள ஐகோர்ட் கிளை, அரசு தரப்பில் பதிலளிக்க உத் தரவிட்டுள்ளது.


மதுரை, ஒத்தக்கடை யைச் சேர்ந்த வக்கீல் ராம் குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற் றும் பொருட்பால் அடங்கிய 1050 குறள்களை 6 முதல் 12ம் வகுப்பு வரை யில் முழுமையாக பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என ஏற்க னவே ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதன் படி, 2017ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், முழுமையாக இல்லாமல் பெயரளவில் மட்டுமே சேர்த்துள் ளனர். திருக்குறள் மட்டும் உள்ளது. அதன் விளக்கம் இடம் பெறவில்லை. தேர்வுகளிலும் பெயரளவில் மட்டும் வினாக்கள் இடம் பெறுகிறது. எனவே, 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் இடம்பெற்றுள்ள 108 அதிகாரங்களை உரிய விளக்கத்துடன் சேர்க்க வும், இதை முழுமையாக மாணவர்களுக்கு பாடம் நடத்தவும், இறுதித்தேர்வுகளில் கட்டாயம் வினாக்கள் இடம் பெற வேண்டுமெனவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்,


மனுவை நேற்று விசா ரித்த நீதிபதிகள் ஆர்.மகா தேவன், ஜெ.சத்யநாரா யண பிரசாத் ஆகியோர், திருக்குறள் இளைய சமுதாயத்தை நல்வழிப்ப டுத்தக் கூடியது. 5 திருக்குறளை அதன் பொருளை உணர்ந்து படித்தார் அவர்களை நல்வழிப்ப டுத்த முடியும். அறிவுரை கூறும் ஆசிரியர் மற்றும்பெற்றோரை மாணவர்கள் தாக்கும் சூழல் உள்ளது. எனவே, மாணவர்களை நல்வழிப்படுத்த நன்னெறி கல்வி மிகவும் அவசியம். 108 அதிகாரங்களில் உள்ள 1050 குறள்களை கட்டாயம் கற்பிக்க வேண்டுமென அரசாணையில் உள்ளது. ஆனால், இதை முறையாக பின்பற்ற வில்லையே? பள்ளிகளில் தற்போது நடைபெறும் தேர்வுகளுக்கான வினாத் தாள்,மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பயனற்றதாகவே உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் வினாத் தாள் தயாரிக்கும் குழுவை கலைக்க நேரிடும். திருக்குறள் பாடத்திட்டத்தை சரி வர பின்பற்றாவிட்டால் பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராகுமாறு உத்தர விட நேரிடும்" என்றனர்.


பின்னர் நீதிபதிகள். மனுவிற்கு தமிழ் வளர்ச் சித்துறை செயலர். தமிழக பள்ளி கல்வித்துறை செயலர்  ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment