நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

14/10/2022

நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

 புதுடில்லி: நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் 12 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. 

 

நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. தற்போது இந்த மனுவில் சில திருத்தங்கள் செய்து மீண்டும் தமிழக அரசு தாக்கல் செய்தது. அந்த மனுவில், மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது குறித்த விரிவான புள்ளிவிவரங்களை தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

இந்த ரிட் மனுவை சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்சு தூலியா அமர்வு விசாரித்தது. அப்போது, மனுவில் கூறப்பட்டுள்ள தமிழக அரசின் வலியுறுத்தல்களை கருத்தில் கொண்டு ரிட் மனுவை விசாரணைக்கு உகந்தது என உத்தரவிட்டது. 

 

இதனையடுத்து நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை இன்று (அக்.,14) நடைபெற்றது. அப்போது, நீட் தேர்வுக்கு எதிரான மசோதா ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு வாதிட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment