இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

17/10/2022

இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

சென்னை : தமிழகத்தில், 27 மாவட்டங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், பல மாவட்டங்களில் கன மழை தொடரும். சென்னையில், இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யும். வானம் மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 34 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.


நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை.


கடலுார், பெரம்பலுார், அரியலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய, 27 மாவட்டங்களிலும், காரைக்காலிலும், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment