2020-2021ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை I / கணினிப் பயிற்றுநர் நிலை 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் .01 / 2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09,09.2021 அன்று வெளியிடப்பட்டது . அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.022022 வரை கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Test ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்கள் மற்றும் கூடுதலாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பணிநாடுநர்கள் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு , அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள 17 பாடங்களுக்கு இவ்வாரிய இணையதளத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான 1 : 2 பட்டியல்கள் 28.08.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
மேலும் , 02.09.2022 முதல் 04.09.2022 ஆகிய நாட்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 12 பட்டியலில் இடம் பெற்ற பணிநாடுநர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன . இதனைத் தொடர்ந்து , அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலும் இனச்சுழற்சி அடிப்படையிலும் History , Economics , Geography , Mathematics , Physics , Chemistry , Botany , Zoology , Computer Science , Commerce , Physical Education , English , Tamil , ஆகிய பாடங்களுக்கு தற்காலிகத் தெரிவுப்பட்டியல்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அவ்வாறு வெளியிடப்பட்ட தற்காலிகத் தெரிவுப் பட்டியலில் சில பணிநாடுநர்கள் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த ஒரு சில சான்றிதழ்களை சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்காததால் அப்பணிநாடுநர்களின் தெரிவு withheld- ல் வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு withheld- ல் வைக்கப்பட்டுள்ள ஒரு சில பணிநாடுநர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்காத சான்றிதழ்களை தற்போது சமர்ப்பித்துள்ளனர். ஆனால் , இன்னும் சில பணிநாடுநர்கள் இன்றுவரை சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை . எனவே , தற்காலிகத் தெரிவுப் பட்டியலில் இடம் பெற்று withheld for want of certificate எனக் குறிப்பிடப்பட்டுள்ள பணிநாடுநர்கள் உடனடியாக 19.09.2022 மற்றும் 20.09.2022 ஆகிய நாட்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தங்களது சான்றிதழ்களை நேரில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment