மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

22/09/2022

மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முத என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், நிர்வாக இடங்களில் சேர்வதற்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமானதை அடுத்து மருத்துவ சேர்க்கையும் தாதமாகிவிட்டது. முன்னதாக கால்நடை மருத்துவப்படிப்புக்கு கடந்த 12ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்க தொடங்கினர். வரும் 26ஆம் தேதி அதற்கான அவகாசம் முடிவடைகிறது. https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆயுஷ் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு மாணவர்கள் நேற்று விண்ணப்பிக்க தொடங்கினர். வரும் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று தொடங்கியுள்ளது. விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் அக்டோபர் 3. மாணவர்கள் http://tnhealth.tn.gov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment