தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

10/09/2022

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பிக்கலாம்

 Tamil-Nadu-Veterinary-Courses-Application-Date-Notification

Tamil Nadu Veterinary Courses Application Date Notification


தமிழ்நாடு மருத்துவ படிப்புகளுக்கு, பல்கலைக்கழக இணையதளம் (https://adm.tanuvas.ac.in) மூலம் 12.09.2022 காலை 10.00 மணி முதல் 26.09.2022 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH / BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் (online applications) வரவேற்கப்படுகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் நான்கு வகையான இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.


Bachelor of Veterinary Science & Animal Husbandry - BVSc & AH (5 ஆண்டுகள்)


Bachelor of Technology (Food Technology) – BTech (FT) (4 ஆண்டுகள்)


Bachelor of Technology (Poultry Technology) – BTech (PT) (4 ஆண்டுகள்)


Bachelor of Technology (Dairy Technology) – BTech (DT) (4 ஆண்டுகள்)


இந்த பட்டப்படிப்புககளுக்கு, பல்கலைக்கழக இணையதளம் (https://adm.tanuvas.ac.in) மூலம் 12.09.2022 காலை 10.00 மணி முதல் 26.09.2022 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் .


அயல்நாடு வாழ் இந்தியர் (NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினர் (Foreign National ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை https://adm.tanvas arcin என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


உயிரியல், தாவரவியல் அல்லது விலங்கியல், இயற்பியல் வேதியியல் ஆகியவற்றுடன் பொதுப் பாடப்பிரிவில் உயர்நிலைப் படிப்பை முடிக்கும் மாணவர்களும் (10+2) தொழிற்கல்வி தொடரில் விவசாயப் பயிற்சிகள் / பால் பண்ணை / கோழிப்பண்ணை படிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடுகள் தமிழ்நாடு அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி அமையும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459