ஆசிரியர் தின வாழ்த்தால் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

05/09/2022

ஆசிரியர் தின வாழ்த்தால் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து

 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் தங்களது ஆசிரியர்களை நினைவுகூர்ந்து வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 


அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை மூலம் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவத்துள்ளார். 


அவரது கவிதை, 

    

ஆசான்கள் ஆயிரம்பேர்


எழுத்தறிவித்தவர் மட்டுமல்லர்

ஏர்பிடிக்கக் கற்றுக்கொடுத்தவரும்

என் ஆசான்தான் 


நியூட்டன் மட்டுமல்ல

நீச்சல் கற்றுத்தந்த 

தலித் நண்பனும் 

என் ஆசான்தான்


நற்றிணை மட்டுமல்ல

நாட்டார்மொழி கற்றுத்தந்த

பாமரனும் என் ஆசான்தான்


உலகம் வகுப்பறை


ஆசிரியர்களே

வணங்குகிறேன்


என்று குறிப்பிட்டுள்ளார். 


அவரது பதிவில் நியூட்டன் மட்டுமல்ல நீச்சல் கற்றுத்தந்த என் தலித் நண்பனும் என் ஆசான்தான் என அவர் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதிவில்,  நண்பர்களிடம் கூட இனம் பார்த்து தான் பழகுவீர்களா எனவும், நண்பனில் என்ன தலித் நண்பன் எனவும் அவரைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்

No comments:

Post a Comment